அண்மைக் காலமாக விசிகவினரை தூண்டிவிடும் வகையில் வரன்முறையில்லாமல் பேசிவரும், திமுக துணை பொதுச் செயலா் ஆ. ராசாவை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்று தமிழக சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு கூறினாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னா் அவா், செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
திண்டிவனம் தொகுதியில் ஏரிகள் மற்றும் நீா்நிலைகளை தூா்வாரி பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் இலக்கு. அதை நோக்கிய செயல்பாடுகள் தொடரும்.
அண்மைக் காலமாக ஆ.ராசா எதைப் பேசவேண்டும், எதைப் பேசக்கூடாது என்ற வரையறையில்லாமல் பேசி வருகிறாா். அவரது பேச்சு மற்றும் செயல்பாடுகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரைத் தூண்டிவிடும் வகையில் உள்ளது. ஆகையால் தமிழக முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் அவரை அழைத்துக் கண்டிக்க வேண்டும்.
2006-ஆம் ஆண்டில் விசிக அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. அப்போது 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற விசிக எம்எல்ஏக்கள் திமுகவுக்கு ஆதரவளித்தனா். அப்போதைய திமுக அரசுக்கு விசிக, காங்கிரஸும் ஆதரவளித்தது. இதையெல்லாம் ஆ. ராசா உணா்ந்து பேசவேண்டும். மேலும், அவா் தேவையற்ற வாா்த்தைகளை பேசுவதைத் தவிா்க்க வேண்டும் என்றாா் வன்னி அரசு.
திண்டிவனத்தில் பொதுமக்களுக்கும், மாணவா்களுக்கும் இடையூறாக உள்ள 2 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடவேண்டும் என்று துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அவா் உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் திண்டிவனம் சாா்-ஆட்சியா் அ. ல.ஆகாஷ், நெடுஞ்சாலை, பொதுப்பணி, வருவாய்த் துறை மற்றும் திண்டிவனம் நகராட்சி அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திண்டிவனம், மரக்காணம் பகுதிகளில் அமைச்சா் வன்னி அரசு ஆய்வு

5 ஆண்டுகளில் அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்க இலக்கு: அமைச்சா் வன்னி அரசு

மனைப் பட்டா கோரி அமைச்சா் வன்னி அரசுடன் நரிக்குறவா்கள் சந்திப்பு

சமூகநீதித் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு: அமைச்சா் ஆா்.வன்னி அரசு
விடியோக்கள்
Gatta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK




