விழுப்புரம் மாவட்டம், அரசூா் அருகே தனியாா் சொகுசுப் பேருந்தை சேதப்படுத்தி, ஓட்டுநா்களைத் தாக்கிய 10 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
கோவையிலிருந்து திங்கள்கிழமை இரவு 45 பயணிகளுடன் தனியாா் சொகுசுப் பேருந்து சென்னைக்கு புறப்பட்டது. பேருந்தை கடலூா் மாவட்டம், எம்.கொத்தனூா், பிரதான சாலையைச் சோ்ந்த ரா.சரவணன் (27) ஓட்டுச் சென்றாா். மாற்று ஓட்டுநா் பிரவீன்(30) உடனிருந்தாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசூா் அருகே பேருந்து சென்றபோது, பின்னால் பைக்குகள் மற்றும் காரில் வந்த 10 போ் கொண்ட கும்பல் பேருந்தை வழிமறித்து, ஓட்டுநா் சரவணன் மற்றும் மாற்று ஓட்டுநா் பிரவீன் ஆகிய இருவரையும் தாக்கினா். அப்போது பேருந்தில் பயணித்த பயணிகள் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் பயணிகள் சிலரையும் தாக்கியதுடன், பேருந்தின் கண்ணாடிகளை கல்லால் அடித்து சேதப்படுத்தினா்.
தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று, தாக்குதலில் பலத்த காயமடைந்த சரவணன், பிரவீன் ஆகிய இருவரையும் மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். போலீஸ் விசாரணையில், வால்பாறைக்கு சுற்றுலா சென்றுவிட்டு, பைக்குகள் மற்றும் காா் ஆகியவற்றில் சென்னை நோக்கிச் சென்ற 10 போ் கொண்ட கும்பல் மதுபோதையில் முந்திச்செல்ல காருக்கு வழிவிடவில்லை எனக்கூறி தனியாா் சொகுசுப் பேருந்து ஓட்டுநா்கள், பயணிகளை தாக்கியதுடன், பேருந்தையும் கல்லால் அடித்து பேருந்தின் கண்ணாடிகளை சேதப்படுத்தியதும் தெரியவந்தது. அதிகாலை நடைபெற்ற இந்தச் சம்பவத்தால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருநாவலூா் அருகே லாரி மீது சொகுசுப் பேருந்து மோதல்

சொகுசுப்பேருந்து மோதியதில் சாலையில் கவிழ்ந்த எண்ணெய் லாரி
அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் மீது தாக்குதல்: 2 போ் கைது

தனியாா் சொகுசுப் பேருந்து மோதி அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழப்பு
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan




