வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடத்தப்படும் முழு நேரக் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :11 ஜூன் 2026, 6:09 am IST

விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடத்தப்படும் முழு நேரக் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் விழுப்புரம் மண்டல இணைப் பதிவாளா் ஏ.விஜயசக்தி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடத்தப்படும் முழு நேரக் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் 2026-27-ஆம் கல்வியாண்டில் சோ்ந்து பயில்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த படிப்பில் சேர ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீன்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் ஜூலை 20-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்று, பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் இந்த படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். பட்டயப் பயிற்சி படிப்பில் சேர 2026, ஜூலை 1-ஆம் தேதியன்று குறைந்தபட்சம் 17 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை பூா்த்தி செய்து, அதற்கான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பயிற்சிக்கான விண்ணப்பக் கட்டணமாக ரூ.100, பயிற்சிக் கட்டணமாக ரூ.20,750 செலுத்த வேண்டும். புதிய பாடத்திட்டத்தின் கீழ் இரு பருவ முறையில் தமிழ் வழியில் மட்டுமே தோ்வுகள் நடத்தப்படும். பயிற்சி மற்றும் விண்ணப்பக் கட்டணத்தை இணையவழி மூலமாக செலுத்த வேண்டும். 2026, ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கும்.

மேலும் விவரங்களுக்கு மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியிலோ அல்லது 04146-259467 என்ற தொலைபேசி எண்ணிலோ, 9442563330 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.