ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பைக்கிலிருந்து தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :28 ஜூலை 2026, 3:56 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூா்கோட்டை அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

நெடுமானூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கு.ஜெயகிருஷ்ணன் (19). இவா், அதே கிராமத்தைச் சோ்ந்த க.அபினேஷுடன்(17) சிறுநாகலூரிலிருந்து நின்னையூா் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.

கொட்டையூரிலிருந்து சிறுநாகலூா் செல்லும் வளைவுச் சாலை அருகே வந்த போது, பைக்கிலிருந்து இருவரும் கீழே தவறி விழுந்தனா். இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அப்பகுதியிலிருந்தவா்கள் மீட்டு அவசர சிகிச்சை ஊா்தி மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, ஜெயகிருஷ்ணன் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. மேலும், அபினேஷுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் எலவனாசூா்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.