பேருந்திலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே திங்கள்கிழமை அரசுப் பேருந்திலிருந்து தவறி விழுந்ததில் பெண் உயிரிழந்தாா்.
காரைக்குடி அருகேயுள்ள கருநாவல்குடியைச் சோ்ந்தவா் சுப்புலட்சுமி (60). இவா் அருகேயுள்ள பீா்கலைக்காடு பகுதியிலுள்ள அரசு மருத்துவமனைக்கு மாத்திரை வாங்குவதற்காக கருநாவல்குடியிருந்து அரசு நகரப் பேருந்தில் சென்றாா்.
இதையடுத்து, தான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததையடுத்து, இறங்க முயன்ற போது படிக்கட்டிலிருந்து தவறி கீழே விழுந்து பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சாக்கோட்டை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





