கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
செய்யாறு அருகே கிணற்றில் தவறி விழுந்த நெசவுத் தொழிலாளி உயிரிழந்தாா்.
பலி
செய்யாறு அருகே கிணற்றில் தவறி விழுந்த நெசவுத் தொழிலாளி உயிரிழந்தாா்.
வெம்பாக்கம் வட்டம், அசனமாபேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் நெசவுத் தொழிலாளி சங்கா்(46). இவரது மனைவி ரங்கநாயகி. தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை சங்கா் ராமநாதீஸ்வரா் கோயில் அருகேயுள்ள விவசாய நிலத்திற்கு சென்ாகத் தெரிகிறது.
அப்போது, அங்குள்ள கிணற்றில் கை கால்களை கழுவ முயன்ற போது தவறி விழுந்துள்ளாா். நீச்சல் தெரியாத காரணத்தால் அவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தகவலறிந்த மோரணம் போலீஸாா் சென்று இறந்தவரின் உடலைக் கைப்பற்றி செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





