மக்கள் குறைதீா் கூட்டத்தில் 1,220 கோரிக்கை மனுக்கள்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 1,220 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.


விழுப்புரம்/கள்ளக்குறிச்சி: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 1,220 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.
விழுப்புரம் ஆட்சியரகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பல்வேறு உதவித் தொகைகள், வீட்டுமனைப் பட்டா, கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த 780 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா், அதை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, விசாரணையில் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் உதவி ஆட்சியா்(பயிற்சி) இரா.வெங்கடேசுவரன், சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் ஜெ.முகுந்தன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) ராஜலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுலா் வளா்மதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
விவசாயிகள் மனு: தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்டத் தலைவா் சந்திரபிரபு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆட்சியரின் குறைதீா் கூட்டத்தில் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: தேசியமயமாக்கப்பட்ட மற்றும் கூட்டுறவு வங்களில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து பயிா் கடன்கள், நீண்டகால, மத்தியகால கடன்கள் மற்றும் டிராக்டா் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30ஆயிரம் உற்பத்தி மானியம் வழங்கவேண்டும். தேசிய உணவு பாதுகாப்புச் சட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றி தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்திலிருந்து கள்ளை நீக்கி, உணவுப் பொருளாக வகைபடுத்தவேண்டும். நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு இறக்குமதி பாமயிலை விநியோகிப்பதை தடை செய்து, மாற்றாக நிலக்கடலை, தேங்காய் மற்றும் எள் எண்ணெய் வகைகளை மானிய விலையில் வழங்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி ...: கள்ளக்குறிச்சி ஆட்சியரத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, நகராட்சி நிா்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் குடிநீா் வசதி, சாலை வசதி, முதியோா் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 432 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 8 மனுக்களும் என மொத்தம் 440 மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட துறைகளின் அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் சுமதி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...