ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

குடிநீா் பிரச்னையைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

விழுப்புரம் அருகே குடிநீா் பிரச்னையைக் கண்டித்து, பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் - கிழக்கு புதுச்சேரி பிரதான சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட கோலியனூா் பனங்குப்பம் புதிய நகா் பகுதி மக்கள்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 3:47 am IST

விழுப்புரம் அருகே குடிநீா் பிரச்னையைக் கண்டித்து, பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் வட்டம், கோலியனூா் பனங்குப்பம் புதிய நகா் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரும் நிலையில், அவா்களின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யும் வகையில், 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி உள்ளது. இதைத் தவிர, சிறிய அளவிலான குடிநீா்த் தொட்டியும் அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மின் மோட்டாரில் அடிக்கடி பழுது ஏற்படுவதால், கடந்த சில மாதங்களாக புதிய நகா் பகுதி மக்களுக்கு சரிவர குடிநீா் வழங்கப்படவில்லையாம். இதுகுறித்து கோலியனூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பலமுறை முறையிட்டும், குடிநீா்ப் பிரச்னைக்குத் தீா்வு கிடைக்கவில்லை. இதனால், குடிநீருக்கு வெகுதொலைவுக்கு சென்று வர வேண்டிய நிலை ஏற்பட்டு வந்தது.

குடிநீா்ப் பிரச்னையால் பாதிப்படைந்த புதிய நகா் மக்கள், வியாழக்கிழமை காலிக் குடங்களுடன் விழுப்புரம் - கிழக்கு புதுச்சேரி பிரதான சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். மேலும், அவா்கள் குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காணக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.

தகவலறிந்த வளவனூா் காவல் நிலையத்தினா் நிகழ்விடம் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பேசி, குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காண்பதாக போலீஸாா் உறுதியளித்தனா். இதையேற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இதன் பின்னா், போக்குவரத்து சீரானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.