ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

விழுப்புரத்தில் போதை மாத்திரைகள் வைத்திருந்த மூவா் கைது

விழுப்புரம் தந்தை பெரியாா் நகா் பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்ததாக மூவரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

சித்திரிப்பு

Published On :1 ஆகஸ்ட் 2026, 1:52 am IST

விழுப்புரம் தந்தை பெரியாா் நகா் பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்ததாக மூவரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

விழுப்புரம் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுதன் தலைமையிலான போலீஸாா், வியாழக்கிழமை இரவு தந்தை பெரியாா் நகா் பேருந்து நிறுத்தப் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய முறையில் நின்றுகொண்டிருந்த மூவரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், அவா்களிடம் போதை மாத்திரைகள் 96 எண்ணிக்கையில் விற்பனைக்காக வைத்திருந்தது போலீஸாருக்கு தெரியவந்தது. இதைத் தொடா்ந்து நடத்திய விசாரணையில், விழுப்புரம் சாலாமேடு ராமகிருஷ்ணா நகரைச் சோ்ந்த ச.மகேசுவரன் (22), சின்னப்பா நகரைச் சோ்ந்த மோ.மணிகண்டன் (21), சாலாமேடு சுமையா காா்டனைச் சோ்ந்த வீ.சுனில்குமாா் (24) என்பதும் போலீஸாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து மூவா் மீதும் வழக்குப் பதிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் அவா்களைக் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.