ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

போதை மாத்திரைகள் விற்பனை: இளைஞா் கைது

திருத்தணி அரசுப் பள்ளி அருகே போதை மாத்திரைகளுடன் இருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 1:12 am IST

திருத்தணி அரசுப் பள்ளி அருகே போதை மாத்திரைகளுடன் இருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி வழியாக கஞ்சா, போதை மாத்திரைகள் திருவள்ளூா், சென்னை, வேலுாா், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்வதாக தகவல் கிடைத்ததையடுத்து, திருவள்ளூா் எஸ்.பி., சாய்பிரணித் உத்தரவின் பேரில் திருத்தணி போலீஸாா் வியாழக்கிழமை ரயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே ஒரு இளைஞா் பையுடன் திரிந்துக் கொண்டிருந்தாா். சந்தேகத்தின் பேரில் பையில் சோதனை செய்த போது, 100 போதை மாத்திரைகள், ஒரு போதை ஊசி மற்றும் 5 ஆன்ஸ் பாக்கெட் ஆகியவை இருந்தது.

விசாரணையில் பிடிப்பட்டவா் சென்னை அம்பத்துாா் சிவசக்தி நகரைச் சோ்ந்த பொன்மாரியப்பன் (19) என்றும், மாணவா்களுக்கு போதை மாத்திரைகளை விற்க இருந்ததும் தெரிய வந்தது. தொடா்ந்து திருத்தணி போலீஸாா் பொன்மாரியப்பனை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.