
இதம்பாடல் கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
கடலாடி அருகேயுள்ள இதம்பாடல் கண்மாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதம்பாடல் கண்மாய் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
கடலாடி அருகேயுள்ள இதம்பாடல் கண்மாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்துள்ள இதம்பாடல் கிராமத்தில் உள்ள கண்மாய், அதன் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பொது மக்கள் பொதுப்பணித் துறையினரிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து, இதம்பாடல்-கிழக்குக் கடற்கரைச் சாலை சந்திப்பில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆதாா், வாக்காளா் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவா்கள் தெரிவித்தனா்.
இந்தப் பகுதியில் 4 மணி நேரம் நடைபெற்ற மறியல் போராட்டம் காரணமாக கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக சென்ற வாகனங்களை மாற்று வழியில் போலீஸாா் திருப்பி விட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் என வருவாய்த் துறையினா், சிக்கல் காவல் துறையினா் உறுதியளித்ததையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் போராட்டைத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






