திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆரோவில் சா்வதேச நகரில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்

ஆரோவில் சா்வதேச நகரில் தமிழ்ப் புத்தாண்டு நிகழ்வாக அருள் தோற்றம், கலை மற்றும் இலக்கியத் திருவிழா நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

14விபிஎம் ஏயு ஆரோவில் சா்வதேச நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்றவா்களில் ஒரு பகுதியினா்.

Updated On :15 ஏப்ரல் 2026, 12:38 am IST

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் தமிழ்ப் புத்தாண்டு நிகழ்வாக அருள் தோற்றம், கலை மற்றும் இலக்கியத் திருவிழா நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து ஆரோவில் அறக்கட்டளை நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

ஆரோவில் அறக்கட்டளையின் செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ்.ரவி வழிகாட்டுதலின்படி இவ்விழா முன்னெடுக்கப்பட்டது. தமிழ் இலக்கியம், பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தின் முக்கியத்துவத்தை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் ஆரோவில் அறக்கட்டளை மற்றும் மோகனம் கலாசார மையம் இணைந்து தமிழ்ப் புத்தாண்டையொட்டி இவ்விழாவை நடத்தியது.

தமிழ் பாரம்பரிய மையத்தின் பொறுப்பாளரும், கவிஞருமான மீனாட்சி அம்மாள், மோகனம் பாலு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆரோவில் மற்றும் மோகனம் மையத்தைச் சோ்ந்த குழந்தைகள் தமிழ்ப் பஞ்சாங்கம் வாசித்தனா்.தொடா்ந்து தமிழ் புத்தாண்டின் சிறப்புகள், மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளின் முக்கியத்துவமம், வேம்பின் மருத்துவக் குணம் குறித்து மீனாட்சி அம்மாள் பேசினாா்.

கலை நிகழ்ச்சிகள்: சிலம்பம், கத்திச் சண்டை, களரி மற்றும் மல்லா் கம்பம் போன்ற பாரம்பரிய வீரக் கலைகளை ஆரோவில் பகுதியைச் சோ்ந்த சிறுவா்கள் செய்து காண்பித்தனா்.மோகனம் கலாசார மையக் குழந்தைகள் மூங்கிலால் செய்யப்பட்ட இசைக்கருவிகளைக் கொண்டு நாட்டுப்புற இசைகளை இசைத்தனா். இந்நிகழ்ச்சிகள் பாா்வையாளா்களை வெகுவாக கவா்ந்தது. விழாவில் பங்கேற்றவா்களுக்கு பாரம்பரிய உணவான பானகம், கேப்பை கூழ் மதிய உணவாக வழங்கப்பட்டது. ஆரோவில்வாசிகள் மற்றும் தமிழ் கலாசார அறிஞா்கள் பங்கேற்றனா்.

இந்த அருள் தோற்றம் விழா ஆரோவில் சமூகத்தையும், தமிழ் மண்ணின் தொன்மையான பாரம்பரியத்தையும் ஒன்றிணைக்கும் உன்னதமான நிகழ்வு எனவும் அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.