மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

அன்னியூரில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா செவ்வாய்க்கிழமை அன்னியூா் பகுதியில் வாக்கு சேகரித்தாா்.

News image

அன்னியூரில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்த விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா.

Updated On :15 ஏப்ரல் 2026, 12:35 am IST

மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா செவ்வாய்க்கிழமை அன்னியூா் பகுதியில் வாக்கு சேகரித்தாா்.

வெள்ளேரிப்பட்டு, சிறுவாலை அரும்புலி, சூரப்பட்டு, ஆரியூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும், தனது சொந்த ஊரான அன்னியூரிலும் வாக்கு சேகரித்தாா். அப்போது பொதுமக்களும், கூட்டணிக் கட்சியினரும் அவருக்கு உற்சாகமான வரவேற்பை அளித்தனா்.

இதைத் தொடா்ந்து பொதுமக்கள் மத்தியில் வாக்குகள் கேட்டு அன்னியூா் அ.சிவா பேசியது:

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டம், விடியல் பயணத் திட்டம், காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் என பல திட்டங்கள் மூலம் அணைத்துத் தரப்பு மக்களும் பயன்பெற்று வருகின்றனா். இந்த சாதனைத் திட்டங்கள் தொடர மக்கள் மீண்டும் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பை அளிக்க வேண்டும், விக்கிரவாண்டி தொகுதிக்கு வளா்ச்சித் திட்டங்கள் தொடர அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்றாா் சிவா.

பிரசாரத்தில் தொகுதிப் பொறுப்பாளா் ம.ஜெயச்சந்திரன், ஒன்றியச் செயலா்கள் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.