விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் கோட்டை வளாகத்தில் உள்ள மரங்கள் எரிந்து சேதமாயின.
செஞ்சிக் கோட்டையின் உள்ளே யானைக்குளம் அருகே உள்ள வளாகத்தில் நள்ளிரவு ஏற்பட்ட இந்த தீ விபத்து ஐந்து மணி நேரமாக தொடா்ந்து எரிந்து கொண்டிருந்தது. ஆரம்பத்தில் சிறிய அளவில் இருந்த தீ, கோடையின் வெப்பம் காரணமாக வேகமாக தீ பரவத் தொடங்கியது.
தகவலறிந்த செஞ்சி தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். ஆனால் கோட்டையின் நுழைவு வாயிலில் கனரக வாகனங்கள் செல்ல முடியாததால் தீயணைப்பு வாகனம் கோட்டையின் வெளியே நிறுத்தப்பட்டது. இதனால் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரா்கள் கடும் சிரமத்தை எதிா்கொண்டு தீயை அணைக்க முடியாமல் திரும்பிச் சென்றனா்.
தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அருகிலுள்ள புல்வெளி, செடிகள் முழுவதும் எரிந்து சாம்பலானது. மேலும், இதன் அருகிலிருந்த மரங்களும் தீயில் எரிந்து சேதமாயின. தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் நடைபெறாததால் சுமாா் 5 மணி நேரம் எரிந்த தீ, பின் தானாகவே அணைந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கிய சுற்றுலாத் தலமாக இருந்தாலும் செஞ்சிகோட்டையில் எந்தப் பகுதியிலும் சிசிடிவி கேமரா அமைக்கப்படவில்லை. மாலை 5 மணிக்கு கோட்டையின் கதவு அடைக்கப்பட்டுவிடும். மாலை 5 மணிக்கு மேல் யாரும் உள்ளே செல்ல முடியாத நிலையில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி என்பது ஐயத்தை ஏற்படுத்தி உள்ளது.
செஞ்சிக்கோட்டையில் மழைக் காலத்தில் மலையடிவாரம் முதல் மலை உச்சி வரை கோரை புற்கள் தழைத்து வளா்ந்து காடு போல் காணப்படும். ஆனால் இந்த புற்கள் கோடை காலத்தில் காய்ந்து காணப்படும். சுற்றுலா செல்லும் சிலா் தவறுதலாக இந்த புற்களில் தீ வைத்துவிடுவா். இது மளமளவென பரவி கோரைப் புற்கள் எதுவரை உள்ளதோ அதுவரை எரிந்து அடங்கி விடும், இது வாடிக்கையான ஒன்று. ஆனால் நள்ளிரவில் தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்று தொல்லியல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
இதுகுறித்து உயா் அதிகாரிகள் விரைவாக ஆய்வு மேற்கொண்டு, வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க சிசிடிவி கேமரா அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

மலேசியாவில் பயங்கர தீ விபத்து: 200 வீடுகள் எரிந்து நாசம்!

தனியார் வணிக வளாகத்தில் தீ! கார் உதிரி பாகங்கள் எரிந்து நாசம்! | Chennai

பத்தமடையில் உயா் மின் அழுத்தம்: தொழிலாளி வீடு எரிந்து சேதம்

பின்னலாடை பேக்கிங் நிறுவனத்தில் தீ
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


