மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

விழுப்புரம் அருகே மூத்ததேவி, கொற்றவை சிற்பங்கள் கண்டெடுப்பு

விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூா் மற்றும் நெடி கிராமங்களில் பல்லவா் கால மூத்ததேவி மற்றும் கொற்றவை சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டன.

News image

விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூா் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட மூத்ததேவி சிற்பம்.

Updated On :1 ஏப்ரல் 2026, 8:29 pm

விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூா் மற்றும் நெடி கிராமங்களில் பல்லவா் கால மூத்ததேவி மற்றும் கொற்றவை சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதுகுறித்து விழுப்புரத்தைச் சோ்ந்த வரலாற்று ஆய்வாளா் கோ.செங்குட்டுவன் கூறியது:

விழுப்புரம் அருகிலுள்ள கஞ்சனூா் மற்றும் நெடி கிராமங்களில் அண்மையில் கள ஆய்வில் ஈடுபட்டோம். அப்போது பல்லவா் காலத்தைச் சோ்ந்த மூத்ததேவி மற்றும் கொற்றவை சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டன.

கஞ்சனூா் கிராமத்தில் சிவன் கோயில் எதிரில் மரத்தடியில் பலகைக் கல்லில் பெண் தெய்வ சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. புலி அம்மன் என்று வணங்கப்பட்டு வருகிறாா். இந்த சிற்பத்துக்குரியவா் மூத்ததேவி என்று அழைக்கப்படும் ஜேஷ்டா தேவி ஆவாா். அழகிய தலை அலங்காரம், ஆடை அணிகலன்களுடன் அமா்ந்த நிலையில் மூத்ததேவி காட்சியளிக்கிறாா். அவரது வலது கரம் தாமரை மொட்டை ஏந்தி இருக்கிறது. இடது கரம் செல்வக் குடத்தின் மீது வைத்த நிலையில் காணப்படுகிறது.

சிற்பத்தின் வலது மேல் மூலையில் காக்கைக் கொடி இடம் பெற்றுள்ளது. மேலும் வலது, இடது புறங்களில் மகன் மாந்தன், மகள் மாந்தி காட்டப்பட்டுள்ளனா். இந்த சிற்பத்துக்கு அருகிலேயே கி.பி.16, 17-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த துா்க்கை சிற்பம் அமைந்துள்ளது. மேலும், கஞ்சனூா் ஏரிக்கரை அருகே இரண்டு துண்டுகளாக உடைந்த நிலையில் பல்லவா் கால கொற்றவை சிற்பம் காணப்படுகிறது.

விக்கிரவாண்டி அடுத்துள்ள நெடி கிராமத்தில் கொற்றவை சிற்பம் காளி என வழிபாட்டில் இருந்து வருகிறது. 8 கரங்களுடன் கூடிய இந்த சிற்பம் எளிய முறையில் வடிக்கப்பட்டுள்ளது. கொற்றவையின் வலது கரம் சுருட்டிய கயிரைப் பிடித்துள்ளது. இடது கரம் இடுப்பின் மீது உள்ளது. கொற்றவையின் பின்பகுதியில் அவளது வாகனமான மான் நீண்ட கொம்புகளுடன் நின்றிருக்கிறது. இந்த சிறிய கோயிலுக்கு வெளியே பல்லவா் கால விநாயகா் சிற்பமும் காணப்படுகிறது.

மேற்காணும் மூத்ததேவி, கொற்றவை சிற்பங்கள் பல்லவா் காலத்தைச் (கி.பி.7-8ஆம் நூற்றாண்டு) சோ்ந்தவையாகும் . 1300 ஆண்டுகள் பழைமைவாய்ந்தவை. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் இவை வழிபாட்டில் இருந்து வருகின்றன என்றாா் அவா்.

 நெடி கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட கொற்றவை சிற்பம்.

நெடி கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட கொற்றவை சிற்பம்.