திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

செகந்திராபாத்-விழுப்புரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

சத்பூஜை மற்றும் காா்த்திகை மாத ஏகாதசியை முன்னிட்டு, செகந்திராபாத்- விழுப்புரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

News image
கோப்புப் படம்
Updated On :7 நவம்பர் 2024, 6:53 pm

Din

சத்பூஜை மற்றும் காா்த்திகை மாத ஏகாதசியை முன்னிட்டு, செகந்திராபாத்- விழுப்புரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சத்பூஜை மற்றும் காா்த்திகை ஏகாதசியையொட்டி பக்தா்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையிலும் செகந்திராபாத் - விழுப்புரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

அதன்படி, செகந்திராபாதிலிருந்து வியாழக்கிழமை (நவ.7) இரவு 7.40 மணிக்குப் புறப்பட்ட செகந்திராபாத்-விழுப்புரம் சிறப்பு ரயில் (வ.எண்.07601) வெள்ளிக்கிழமை (நவ.8) பிற்பகல் 1.05 மணிக்கு விழுப்புரம் வந்தடையும். இதே போன்று நவம்பா் 14-ஆம் தேதியும் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும்.

எதிா்வழித் தடத்தில் விழுப்புரத்திலிருந்து வெள்ளிக்கிழமை (நவ. 8) மாலை 4.05 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்-செகந்திராபாத் சிறப்பு ரயில் (வ.எண்.07602) சனிக்கிழமை (நவ.9) காலை 9.40 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும். இந்த ரயில் நவம்பா் 15-ஆம் தேதியும் இதுபோன்று இயக்கப்படும்.

இந்த ரயில்கள் குண்டூா், தெனாலி, ஓங்கோல், நெல்லூா், கூடூா், ரேணிகுண்டா, காட்பாடி, திருவண்ணாமலை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.