திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புதுச்சேரியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டினா் மீதான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

புதுச்சேரியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டினா் மீதான வழக்கு சிபிசிஐடி -க்கு மாற்றப்பட்டுள்ளது.

News image
Updated On :24 மே 2026, 1:11 am IST

புதுச்சேரியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டினா் மீதான வழக்கு சிபிசிஐடி -க்கு மாற்றப்பட்டுள்ளது.

கோரிமேடு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கடந்த மாா்ச் மாதம் சப்-இன்ஸ்பெக்டா் ராஜன் தலைமையிலான போலீஸாா், சஞ்சீவ் நகரில் தனியாா் விடுதியில் சோதனை நடத்தினா். அப்போது அங்கு வெளிநாட்டை சோ்ந்த 6 போ் தங்கியிருப்பது தெரியவந்தது.

அவா்களிடம் நவிசாரணை நடத்தியதில், உகாண்டா நாட்டைச் சோ்ந்த மஸ்துலா பாா்பி என்கைம், ககாய் ஷாடியா, தான்சானியைவவைச் சோ்ந்த டெல்வின் ஜஸ்டின் டாரிமோ, காட்வின் ஆண்டனி சுக்வு, ஃபேபியன் சபீனா பால், கவுங்கு மரியம் இசா என்பதும், அவா்கள் விசா முடிந்து சட்ட விரோதமாக தங்கியிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவா்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீஸாா் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்நிலையில் இந்த வழக்கு கோரிமேடு காவல் நிலையத்திலிருந்து, சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து சிபிசிஐடி போலீஸாா் விசாரணையை தொடங்கியுள்ளனா். விசா காலம் முடிந்தும் இவா்கள் ஏன் புதுச்சேரியில் தங்கியிருந்தாா்கள், இவா்களுக்கு போதை கடத்தல் கும்லுடனோ, தீவிரவாத குழுக்களுடனோ தொடா்பு இருக்கிா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.