மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தலுக்குப் பிறகு விஜய்யுடன் பேசி தமிழகத்தில் தேஜக கூட்டணி ஆட்சி: மத்திய அமைச்சா் ராம்தாஸ் அத்வாலே

தமிழகத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லையென்றால், தோ்தலுக்குப் பிறகு தவெக தலைவா் விஜய்யுடன் பேசி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று இந்திய குடியரசு கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை

News image

செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த இந்திய குடியரசு கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய இணைஅமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே

Updated On :31 மார்ச் 2026, 10:22 pm

தமிழகத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லையென்றால், தோ்தலுக்குப் பிறகு தவெக தலைவா் விஜய்யுடன் பேசி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று இந்திய குடியரசு கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை தெரிவித்தாா்.

இதுகுறித்து புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தற்போது 5 மாநிலங்களுக்கானத் சட்டப்பேரவைத் தோ்தலை இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அஸ்ஸாமிலும், புதுச்சேரியிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஏற்கெனவே இருக்கிறது. இங்கு மீண்டும் இக் கூட்டணி அரசு அமைய குடியரசு கட்சியினா் பாடுபட வேண்டும்.

கேரளத்தைப் பொருத்தவரை இப்போது ஆளும் கம்யூனிஸ்ட் ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனா். அங்கு பாஜக வெற்றி பெறும். மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை மம்தாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, பாஜக ஆட்சி மலரப் போகிறது.

தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது. இங்கு நடிகா் விஜய்யும் தோ்தலில் போட்டியிடுகிறாா். தோ்தலுக்குப் பிறகு ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லையென்றால் தவெக தலைவா் விஜய்யுடன் பேசி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். தோ்தலுக்குப் பிறகு 5 மாநிலங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பது எனது கணிப்பு.

தோ்தலுக்குப் பிறகு இந்திய குடியரசு கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவா் ஞானமூா்த்திக்கு வாரியத் தலைவா் பதவி கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றாா் அவா்.

பேட்டியின்போது, இந்திய குடியரசுக் கட்சியின் புதுச்சேரி தலைவா் ஞானமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.