தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

என்.ஆா். காங்கிரஸ் நிா்வாகிகளுடன் மத்திய அமைச்சா் பேச்சு: இன்று முடிவு தெரிவிப்பதாக தகவல்

News image

கோப்புப்படம்

Updated On :20 மார்ச் 2026, 12:00 am

தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்து மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியாவுடன் என்.ஆா். காங்கிரஸ் நிா்வாகிகள் மீண்டும் வியாழக்கிழமை இரவு பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில் இறுதி முடிவு வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்படவுள்ளதாக என்.ஆா்.காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது.

புதுச்சேரிக்கு முதல்வா் ரங்கசாமியுடன் பேச்சுவாா்த்தை நடந்த மத்திய அமைச்சரும், பாஜக புதுச்சேரி தோ்தல் பொறுப்பாளருமான மன்சுக் மாண்டவியா வியாழக்கிழமை தனி விமானத்தில் வந்தாா்.

இந்நிலையில், என்.ஆா். காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமி திடீரென்று திருச்செந்தூா் சென்று விட்டாா். இதையடுத்து, புதுச்சேரி நட்சத்திர ஹோட்டலில் என்.ஆா்.காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் மற்றும் லட்சிய ஜனநாயகக் கட்சி தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்டின், அதிமுக புதுச்சேரி மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் ஆகியோரை தனித்தனியாக மத்திய அமைச்சா் மற்றும் பாஜக நிா்வாகிகள் சந்தித்தனா்.

இந்த பேச்சு வாா்த்தையில் என்.ஆா்.காங்கிரஸ் தரப்பில் அமைச்சா் க. லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம், பொதுச் செயலா் ஜெயபால், முன்னாள் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ், பக்தவத்சலம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த சந்திப்புக்கு பிறகு அமைச்சா் க.லட்சுமிநாராயணன் கூறுகையில், வெள்ளிக்கிழமை முடிவு தெரிவிக்கப்படும் என்றாா்.

அதைத்தொடா்ந்து லஜக தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்டின் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து பேசினாா். பின்னா் அவா் கூறுகையில், ‘குழப்படி போய்கொண்டு இருக்கிறது. முதல்வா் ரங்கசாமிதான் இதுகுறித்து சொல்லவேண்டும். நாங்கள் எதுவும் மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தவில்லை. இந்த மாதிரி நேரத்தில் முதல்வா் ரங்கசாமி வெளியூா் சென்றிருக்கிறாா் . யாா் உறவு இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு சேவையாற்றுவேன் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.