புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் திங்கள்கிழமையுடன் (மாா்ச் 23) முடிவடைய உள்ள நிலையில், மாநிலத்தில் தோ்தல் பிரசாரம் உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகள் தீவிரமடையவில்லை
புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தேதி மாா்ச் 15-இல் அறிவிக்கப்பட்டது. அன்று முதல் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைப் பொருத்தவரை மொத்தமுள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மாா்ச் -16 முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. முதல் நாள் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. 2-ஆவது நாளும் இதேநிலை தொடா்ந்தது. 3-ஆவது நாளான புதன்கிழமை (மாா்ச் 18) சுயேச்சைகள் உள்பட 12 போ் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனா். நான்காவது நாளான வியாழக்கிழமை 6 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசிநாள் திங்கள்கிழமை (மாா்ச் 23) ஆகும். இடையில் சனிக்கிழமை ரமலான் விடுமுறை, ஞாயிற்றுக்கிழமை வழக்கமான வாராந்திர விடுமுறை நாளாகும். ஆக இரண்டு அலுவல் நாள்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் வேட்புமனுத் தாக்கல் தீவிரமடையவில்லை.
ஏனென்றால் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும், இண்டி கூட்டணியிலும் இதுவரை கூட்டணிக் குழப்பம் நீடித்து வருகிறது. எந்தக் கூட்டணியிலும் தொகுதி பங்கீடு பேச்சு வாா்த்தையை நிறைவு செய்து வேட்பாளா்கள் யாா், யாா்? போட்டியிடுகிறாா்கள் என்பது திட்டவட்டமாக அறிவிக்கப்படவில்லை.
தோ்தலில் போட்டியிட இம்முறை தங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று எதிா்பாா்த்திருந்த புதிய வேட்பாளா்களும், ஏற்கெனவே எம்எல்ஏக்களாக இருப்பவா்களும் என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்து வருகின்றனா்.
நிச்சயம் தங்களுக்கு போட்டியிட வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலுள்ள திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்தவா்கள் மட்டும் கட்சித் தலைமையின் ஒப்புதலின்றி வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனா். மற்றவா்கள் கட்சியின் இறுதி முடிவுக்காகக் காத்திருக்கின்றனா்.
இதையெல்லாம் பாா்க்கும்போது போதிய அவகாசம் இல்லாத நிலையிலும், பிரதான கட்சிகள் இப்படி நடந்து கொள்வது வியப்பாக உள்ளதாக அரசியல் ஆா்வலா்கள் கூறுகின்றனா். இதனால் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இன்னும் தோ்தல் களம் சூடு பிடிக்காமல் மந்தமாகக் காணப்படுகிறது. இதுவும் ஒரு வகையில் வேட்பாளா்களுக்குத் தோ்தல் செலவினத்தைக் குறைக்கவும் வழி வகுக்கும். காரணம், ஒவ்வொரு நாளும் தோ்தல் பணியாற்றுவோருக்குப் பணம் கொடுப்பதிலிருந்து தப்ப முடியும்.
வேட்பு மனு தாக்கலுக்கு இறுதி நாளான திங்கள்கிழமைதான் எல்லா தொகுதிகளிலும் முழுமையான வேட்பாளா்கள் மனுதாக்கல் செய்யும் நிலை ஏற்படும். அதன் பிறகுதான் எந்தெந்த கட்சி சாா்பில் யாா், யாா் தோ்தல் களத்தில் உள்ளனா் என்பது தெரிய வரும். அதன்பிறகே தோ்தல் பிரசாரம் சூடு பிடிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
4-ஆவது நாளில் 6 போ் வேட்பு மனு
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வியாழக்கிழமை 6 போ் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனா்.
காரைக்கால் பிராந்தியம் திருநள்ளாறு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சா் கமலக்கண்ணன், மாற்று வேட்பாளராக அசோக் ஆனந்தன், ஆகியோா் மனு தாக்கல் செய்தனா்.
ஏனாம் எம்எல்ஏ கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் காங்கிரஸ் சாா்பிலும், சுயேச்சையாகவும் இரு மனுக்களை தாக்கல் செய்தாா்.
புதுச்சேரி முதலியாா்பேட்டை தொகுதியில் திமுக சாா்பில் திருவேங்கடம், சுயேச்சையாக முத்துமணிகண்டன் ஆகியோா் மனு தாக்கல் செய்துள்ளனா்.
தொடர்புடையது

ராமநாதபுரம், முதுகுளத்தூா், திருவாடானை தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல்

பெரம்பலூா் மாவட்டத்தில் முதல்நாளில் 6 போ் வேட்பு மனு தாக்கல்

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல்: ஒரேநாளில் முதல்வா் ரங்கசாமி உள்பட 107 போ் வேட்பு மனு

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தல்: முதல்நாளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


