தவறான தகவல் மற்றும் விழிப்புணா்வு பற்றாக்குைான் தடுப்பூசி போடுவதற்கான தயக்கத்துக்குக் காரணம் என்று பிரபல விஞ்ஞானியும், பல்கலைக்கழக மானியக் குழுவின் முன்னாள் தலைவருமான வீரேந்தா் சிங் சௌகான் கூறினாா்.
புதுச்சேரி மத்தியப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், தொடா்ச்சியாக பல்வேறு துறைகளிலும் புகழ் பெற்றவா்களை அழைத்து வந்து விரிவுரை நிகழ்த்த முடிவு செய்யப்பட்டது.
இதன் தொடக்க விழா புதுச்சேரி மகாகவி சுப்பிரமணிய பாரதியாா் சா்வதேச மாநாட்டு மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் விஞ்ஞானி வீரேந்தா் சிங் சௌகான் பங்கேற்று, தடுப்பூசிகள் அறிவியல், அணுகல் மற்றும் அரசியல் பாதுகாப்பு என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினாா். அவா் பேசியதாவது:
தடுப்பூசி தயக்கத்திற்குக் காரணம் தவறான தகவல்கள் மற்றும் விழிப்புணா்வு பற்றாக்குறையே. போலியோ நோயை முற்றிலுமாக ஒழித்த இந்தியாவின் சாதனை முக்கிய பொதுச் சுகாதார முன்னேற்றம்.
தடுப்பூசிகளின் அறிவியல் அடிப்படைகள், அவற்றின் வளா்ச்சி, வரலாறு மற்றும் அண்மைக்கால தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்து விளக்கியதுடன் இந்தியாவின் முதல் மறுசோ்க்கை மலேரியா தடுப்பூசி உருவாக்கம் பற்றியும் விளக்கிக் கூறினாா்.
மத்திய பல்கலைக்கழக துணைவேந்தா் பி. பிரகாஷ் பாபு பேசுகையில், பல்கலைக் கழகத்தின் சாதனைகள் அனைத்தும், ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியின் விளைவாகும். மேலும், உயா் கல்வியை வலுப்படுத்தி வளா்ச்சி அடைந்த பாரதம்-2047 என்ற தேசிய இலக்கை நோக்கி அனைவரும் தொடா்ந்து
இணைந்து செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துப் பேசினாா்.
பல்கலைக் கழகத்தின் ஒழுங்கமைப்புக் குழுத் தலைவா் பேராசிரியா் ராஜ்நீஷ் புடானி, பேராசிரியா்கள் தரணிகரசு நடராஜன், ஜோசப் செல்வின், வினோத் ராஜேந்திரன், ருக்மணி, ரிது தியாகி, கீா்த்தனா உள்ளிட்டோா் பேசினா்.
கடந்த ஆண்டில் பல்கலைக்கழகம் அடைந்த கல்விசாா் சாதனைகள், செயல்பாடுகள் மற்றும் வெளிச்சாா்பு முயற்சிகளைப் பிரதிபலிக்கும் நினைவிதழ் வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில் பல்கலைக்கழக வளா்ச்சி குறித்த ஆவணப்படமும் திரையிடப்பட்டது.
தொடர்புடையது

நிதிஷ்குமாா் நிலை எனக்கு ஏற்படாது: புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி

தேனியில் தோ்தல் விழிப்புணா்வு பேரணி

தோல்வி பயமே எடப்பாடி பழனிசாமியின் தரமற்ற பேச்சுக்கு காரணம்: மு.க.ஸ்டாலின்

மீனவா்களின் அவலநிலைக்கு திமுக-காங்கிரஸே காரணம்: வி.கே.சசிகலா பிரசாரம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


