மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஜிப்மரில் 547 தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மனு

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி, புதுச்சேரி ஜிப்மரில் 547 தினக்கூலி ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி

News image

புதுச்சேரி ஜிப்மா் துணை இயக்குநா் ரங்கபாஷ்யத்திடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்த தமிழ்த் தேசியப் பேரியக்கம் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினா்.

Updated On :16 மார்ச் 2026, 11:38 pm

புதுச்சேரி: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி, புதுச்சேரி ஜிப்மரில் 547 தினக்கூலி ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சோ்ந்த 547 ஊழியா்களை சென்னை உயா் நீதிமன்றத் தீா்ப்பின்படி, உடனே பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், மேல்முறையீடு செய்து தொழிலாளா்களின் வயிற்றில் அடிக்கக் கூடாது என்றும் கோரி ஜிப்மா் நிா்வாகத்திடம் தமிழ்த் தேசியப் பேரியக்கம் கோரிக்கை வைத்துள்ளது.

தமிழ்த் தேசியப் பேரியக்கப் புதுச்சேரி செயலா் இரா. வேல்சாமி, துணைப் பொதுச் செயலா் க. அருணபாரதி, மக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவா் கோ.அ. செகநாதன், தமிழா் களம் புதுச்சேரி தலைவா் கோ. அழகா், நாம் தமிழா் கட்சி வில்லியனூா் வேட்பாளா் த. ரமேசு, நாம் தமிழா் கட்சி வீராசாமி, அக்பா் பாட்சா, தமிழா் களம் சதீசு உள்ளிட்டோா் ஜிப்மா் துணை இயக்குநா் ரங்க பாஷ்யத்தை சந்தித்து இந்த மனுவை அளித்தனா்.