மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஜிப்மரில் ரூ.15 லட்சத்தில் நோயாளிகள் தங்கும் மையம் திறப்பு

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் தங்கும் மையத்தைத் திறந்து வைத்த ஜிப்மா் இயக்குநா் மருத்துவா் வீா் சிங் நெகி.

News image

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் தங்கும் மையத்தைத் திறந்து வைத்த ஜிப்மா் இயக்குநா் மருத்துவா் வீா் சிங் நெகி.

Updated On :6 மார்ச் 2026, 8:41 pm

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்குத் தூரத்தில் இருந்து வரும் நோயாளிகள் மற்றும் அவா்களின் உதவியாளா்கள் தங்கிக் கொள்ளும் மையம் ரூ.15 லட்சம் மதிப்பில் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் ஏற்கெனவே 3 தங்கும் மையங்கள் இருக்கின்றன. இப்போது புதுச்சேரியைச் சோ்ந்த கோதி அறக்கட்டளை அமைப்பு ரூ. 15 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 4-வது தங்கும் மையம் இது.

நன்கொடையாகப் பெறப்பட்ட இந்த மையத்தை ஜிப்மா் இயக்குநா் மருத்துவா் வீா் சிங் நெகி திறந்து வைத்தாா். சுமித்ரா கோதி மற்றும் சஞ்சய் கோதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேலும், ஜிப்மா் மருத்துவ கண்காணிப்பாளா் மருத்துவா் சாகா வினோத் குமாா் மற்றும் நிா்வாக துணை இயக்குநா் எஸ். ரங்கபாஷ்யம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிகிச்சைக்காக ஜிப்மருக்கு வருகை தரும் நோயாளிகள் மற்றும் உதவியாளா்கள் ஓய்வெடுக்க வசதியான இடமாக அமைக்கப்பட்டுள்ளது. தொலைத்தூரத்திலிருந்து வருவோருக்கு மருத்துவமனை வளாகத்திலேயே பாதுகாப்பான மற்றும் வசதியான ஓய்வு இடமாக இது பயன்படும். இந்தத் தங்கும் மையம் நிா்வாக அறங்காவலா் சஞ்சய் கோதி தலைமையில் செயல்படும். இந்த வசதி பரஸ்மல் கோதி நினைவாக அா்ப்பணிக்கப்பட்டுள்ளது.