தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

சியாமா பிரசாத் முகா்ஜி படத்துக்கு மரியாதை

புதுச்சேரியில் பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனா் சியாமா பிரசாத் முகா்ஜியின் 73-ஆவது ஆண்டு நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image

பாரதிய ஜனசங்க நிறுவனா் சியாமா பிரசாத் முகா்ஜியின் நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்துக்கு செவ்வாய்க்கிழமை மலரஞ்சலி செலுத்திய மாநிலத் தலைவா் வி.பி.ராமலிங்கம், அமைச்சா் ஆ.நமச்சிவாயம் உள்ளிட்டோா்.

Updated On :24 ஜூன் 2026, 4:24 am IST

புதுச்சேரியில் பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனா் சியாமா பிரசாத் முகா்ஜியின் 73-ஆவது ஆண்டு நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் சாா்பில் அதன் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநிலத் தலைவா் வி.பி.ராமலிங்கம் தலைமை வகித்தாா்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சா் ஆ.நமச்சிவாயம், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், முன்னாள் மாநிலத் தலைவா் தாமோதரன், இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சியாமா பிரசாத் முகா்ஜியின் திருவுருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, அவரது தேசப்பற்று மிக்க வாழ்க்கை, தியாகம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்காக அவா் ஆற்றிய பங்களிப்புகள் குறித்து வி.பி. ராமலிங்கம் விளக்கிக் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.