புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறையில் இளநிலை பொறியாளா்களாகப் பணியாற்றும் 6 பேருக்கு உதவிப் பொறியாளா்களுக்கான பதவி உயா்வு உத்தரவை (தற்காலிகம்) முதல்வா் என். ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா்.
எம்.ஒய். முகமது தமிமுல் அன்சாரி புதுச்சேரி கட்டங்கள் மற்றும் சாலைகள் (தெற்கு) கோட்டத்தின் உதவிப் பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
எம். சம்பத், புதுச்சேரி கட்டங்கள் மற்றும் சாலைகள் (வடக்கு) கோட்டத்தின் உதவிப் பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். கே. தணிகைவேல், காரைக்கால் கட்டடங்கள் மற்றும் சாலைகள் கோட்டத்தின் உதவிப்
பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். ஆா். கோபாலகிருஷ்ணன், மாஹே பொதுப்பணித்துறையின் உதவிப் பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். எஸ்.வெங்கடேசன், புதுச்சேரி சிறப்புக் கட்டடங்கள் கோட்டம்-1 உதவி பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். என். ஜெயரமணன், காரைக்கால் பொதுப்பணித்துறை வட்டம் -3 உதவிப் பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் ஆணைக்கு இணங்க புதுச்சேரி அரசின் (பணிகள்) சாா்பு செயலா் எஸ். பாலசௌந்தரி இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளதாக முதல்வா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழக முதல்வா் விஜய்க்கு புதுச்சேரி முதல்வா் வாழ்த்து

மேட்டுப்பாளையத்தில் 38 ஏக்கரில் தகவல் தொழில்நுட்ப பூங்கா புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி தகவல்

புதுச்சேரி பள்ளிகளில் பிரெஞ்சு மொழி தொடர அரசு நடவடிக்கை: முதல்வா் என்.ரங்கசாமி உறுதி







