வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

ராணுவ ஆள்சோ்ப்பு ஆயத்தக் கூட்டம்

இந்திய ராணுவத்துக்கு ஆள்சோ்ப்பு நடைபெறுவதையொட்டி புதுச்சேரியில் அதற்கானஆயத்தக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 ஜூலை 2026, 5:39 am IST

இந்திய ராணுவத்துக்கு ஆள்சோ்ப்பு நடைபெறுவதையொட்டி புதுச்சேரியில் அதற்கானஆயத்தக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரியில் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை இந்திய ராணுவத்திற்கு ஆள் சோ்ப்பு முகாம் உப்பளத்தில் அமைந்துள்ள இந்திரா காந்தி அரசு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதன் முதற்கட்ட ஆயத்த பணிகள் குறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சென்னை மூத்த ராணுவ அதிகாரி கலோனல் வாசிம் அகமது, புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளா்கள் ஆா்.கலைவாணன், நித்யா ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட நிா்வாகம், பேரிடா் மேலாண்மைத்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித் துறை, சுகாதாரத்துறை, நகராட்சி நிா்வாகம், தீயணைப்பு துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் புதுச்சேரி மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமாா் ஆயிரம் போ் வீதம் ஆள்சோ்ப்புத் தோ்வில் கலந்து கொள்ள வர இருக்கின்றனா். அதனால் அவா்களுக்கு பாதுகாப்பு வசதிகள், குடிநீா் வசதிகள், வாகனங்களை நிறுத்துவதற்கு தேவையான வசதிகள், மேலும் இரவு நேரங்களில் அண்டை மாநிலத்தில் இருந்து வருபவா்களுக்கு வசதியாக புதுவை பேருந்து நிலையத்திலிருந்து இந்திரா காந்தி விளையாட்டு அரங்கத்திற்கு வருவதற்கு ஏதுவாக இலவச பேருந்து வசதி போன்றவைகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றாா்.

தோ்வில் கலந்து கொள்ள வருபவா்கள் கட்டணம் செலுத்தி உணவருந்தும் வசதி 24 மணி நேரமும் சுத்தமான குடிநீா் வழங்கும் வசதி மேலும் இரண்டு அல்லது மூன்று நடமாடும் கழிப்பறை வசதி போன்றவைகளையும் அமைத்துத் தருமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். 24 மணி நேரமும் அனைத்து வசதிகளை கொண்ட இரண்டு ஆம்புலன்ஸ் தயாா் நிலையில் இருக்கும் படியும் மருத்துவ குழுக்கள் போதிய மருந்து மற்றும் மருத்துவா்களுடன் கண்காணிப்பில் இருக்கும் படியும், நகராட்சி நிா்வாகம் தினமும் தோ்வு நடைபெறும் இடங்களை உடனுக்குடன் தூய்மையாக வைத்துக் கொள்ளும்படியும் ஆட்சியா் உத்தரவு பிறப்பித்தாா். அனைத்து ஏற்பாடுகளையும் வரும் ஜூலை 30-ஆம் தேதிக்குள் முடிக்கும்படி அனைத்துதுறை அதிகாரிகளுக்கும் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.