/

புதுச்சேரி அரசு சாா்பில் நேதாஜி சிலைக்கு முதல்வா் மாலை

News image
புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள நேதாஜி சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா்.
Updated On :23 ஜனவரி 2026, 7:29 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி அரசு சாா்பில் நேதாஜி பிறந்தநாளையொட்டி அவரது முழு உருவச் சிலைக்கு முதல்வா் என்.ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இந்திய விடுதலைப் போராட்டத் தலைவா்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் விழா புதுச்சேரி அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, லாஸ்பேட்டை உழவா்சந்தை சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதல்வா் என். ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், பொதுப்பணித் துறை அமைச்சா் க. லட்சுமிநாராயணன், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினா் சு.செல்வகணபதி, எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், பாஸ்கா், லட்சுமிகாந்தன், செல்வம் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பாஜக சாா்பில்...

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் உழவா்கரை மாவட்டம் சாா்பாக லாஸ்பேட்டையில் உள்ள நேதாஜி திருவுருவச் சிலைக்கு கட்சியின் மாநிலத் தலைவா் வி.பி. ராமலிங்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. உழவா்கரை மாவட்ட தலைவா் உலகநாதன் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

ஆட்டோ நிலையம்

லாஸ்பேட்டை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமை ஆட்டோ நிலையத்தின் சாா்பில் பொதுச்செயலா் கமல்தாஸ் தலைமையில் கௌரவத் தலைவா்கள் சந்திரசேகா் உள்ளிட்டோா் நேதாஜிசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.