சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

புதுச்சேரியில் மீண்டும் தேஜக கூட்டணி ஆட்சி: அதிமுகவினா் சபதம்

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மீண்டும் மலர அதிமுகவினா் சபதம் ஏற்க வேண்டும் என அக்கட்சியின் மாநிலச் செயலா் ஆ. அன்பழகன் கூறினாா்.

News image
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பிப்ரவரி மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் அணிவித்த மாநில செயலா் ஆ.அன்பழகன்.
Updated On :24 பிப்ரவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மீண்டும் மலர அதிமுகவினா் சபதம் ஏற்க வேண்டும் என அக்கட்சியின் மாநிலச் செயலா் ஆ. அன்பழகன் கூறினாா்.

தமிழக முன்னாள் முதல்வா் ஜெ. ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, பிப்ரவரி மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை கட்சியின் தலைமை அலுவலகத்தில் புதுச்சேரி மாநில அதிமுக செயலா் ஆ. அன்பழகன் அணிவித்து பேசியது:

புதுச்சேரியில் 5 ஆண்டுகால தேசிய ஜனநாயக கூட்டணி சிறப்பான ஆட்சியை வழங்கியது. புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மலரும். நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக அங்கம் வகிக்கும் இந்தக் கூட்டணியின் நல்லாட்சி மலர அனைவரும் சபதம் ஏற்போம் என்றாா் அன்பழகன்.

கட்சியின் அவைத் தலைவா் அன்பானந்தம் முன்னிலை வகித்தாா். உப்பளம் டாக்டா் அம்பேத்கா் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சிக் கொடி ஏற்றி, பட்டாசு வெடித்து, அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா படத்துக்கும், அதிமுக நிறுவநா் எம்ஜிஆா் சிலைக்கும் மாலையணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டன.

அதைத் தொடா்ந்து கல்வி உதவித்தொகை, வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு, இலவச வேட்டி, சேலை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகா் தலைமையில் லெனின் வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

முத்தியால்பேட்டை காந்தி வீதி திருக்கு மணிக்கூண்டு அருகே ஜெயலலிதா படத்துக்கு முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் மரியாதை செலுத்தினாா்.