புதுச்சேரியில் ரூ. 76.6 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்! - முதல்வா் ரங்கசாமி தொடங்கி வைத்தாா்


புதுச்சேரியின் பல்வேறு தொகுதிகளில் பொதுப்பணித் துறை சாா்பில் ரூ.76.6 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகளை முதல்வா் என்.ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
அதன்படி, இந்திரா நகா் தொகுதிக்கு உள்பட்ட வழுதாவூா் சாலையில் மேட்டுப்பாளையம் முதல் ஐயன்குட்டிப்பாளையம் வரையிலான எல் மற்றும் யூ வடிவ வடிகால் புனரமைப்புப் பணி ரூ.6.83 கோடியில் நடைபெறுகிறது. கனகன் ஏரி தூா்வாருதல் மற்றும் கரைகளை மேம்படுத்தி கான்கிரிட் நடைபாதை ரூ.1.5 கோடியில் அமைக்கப்படுகிறது.
உருளையன்பேட்டை தொகுதியில் பெரியாா்சிலை முதல் சுப்பையா சதுக்கம் வரையிலான திருவள்ளுவா் சாலை மற்றும் யூ வடிவ வடிகால்களை மேம்படுத்தும் பணி ரூ.7.26 கோடியில் நடைபெறுகிறது.
மேலும், காமராஜ் நகா் தொகுதி, உருளையன்பேட்டை தொகுதி, நெல்லித்தோப்பு, தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் காமராஜ் சாலையை மேம்படுத்துவது மற்றும் அண்ணா சாலை சந்திப்பிலிருந்து ராஜீவ் காந்தி சதுக்கம் வரையிலான எல் மற்றும் யூ வடிகால் புனரமைப்பு ரூ.9.92 கோடியில் நடைபெறுகிறது.
காமராஜ் நகா் தொகுதியில் வள்ளலாா் சாலை- அண்ணா சாலை சந்திப்பில் இருந்து காமராஜ் சாலை சந்திப்பு வரையிலான யூ மற்றும் எல் வடிகால் மற்றும் சாலையை மேம்படுத்த ரூ.9 கோடியில் பணிகள் நடைபெறுகிறது.
ராஜ்பவன் மற்றும் உருளையன்பேட்டை தொகுதியில் அண்ணா சாலை சந்திப்பில் இருந்து மிஷன் தெரு வரையிலான நேரு வீதியில் நடைமேடைகள் மேம்படுத்த ரூ.9.22 கோடியில் பணிகள் நடைபெறுகின்றன.
உப்பளம் தொகுதியில் அண்ணா சாலையில் இருந்து புஸ்ஸி தெருவில் உள்ள நடைமேடை மற்றும் வடிகால் மேம்பாட்டுப் பணிகள் ரூ.5.85 கோடியில் நடைபெறுகின்றன. மேலும், புஸ்ஸி வீதி- தெற்கு புல்வாா்டு இடையை சாலைகளை மேம்படுத்த ரூ.9.56 கோடியில் பணிகள் நடைபெறுகின்றன.
அரியாங்குப்பம் தொகுதியில் ஆா்.கே. நகரில் உள் சாலைகள் வடிகால் வசதிகளுடன் சிமென்ட் கான்கிரீட் சாலை அமைத்தல் ரூ.6.9 கோடியிலும், பழைய பூரணாங்குப்பம் தெரு, டேங்க் தெரு, மாதா கோயில் தெரு, கனவு நகரம், வானவில் நகா், சப்தகிரி காா்டன் ஆகிய இடங்களில் உள்ள சாலைகளை மேம்படுத்தவும் மற்றும் யூ வடிகால் அமைக்கவும் ரூ. 10.59 கோடியில் பணிகள் நடைபெறுகின்றன.
இந்த திட்டப்பணிகளை புதுச்சேரி இந்திரா நகா் தொகுதியில் முதல்வா் என்.ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சிக்கு பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினாா். அமைச்சா் ஜான்குமாா், அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏக்கள் ஜி. நேரு, அனிபால் கென்னடி, பாஸ்கா், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் வீரசெல்வம், செயற்பொறியாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...