டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

புதுச்சேரி ரயில் சேவையில் மாற்றம்

பொறியியல் பணி பராமரிப்பு காரணமாக புதுச்சேரி ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :9 பிப்ரவரி 2026, 9:02 pm

Syndication

புதுச்சேரி: பொறியியல் பணி பராமரிப்பு காரணமாக புதுச்சேரி ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுச்சேரி- கச்சிகுடா விரைவு ரயில் பிப். 17 புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 12.45 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும். வழியில் தேவையான இடத்தில் 120 நிமிஷங்கள் கட்டுப்படுத்தப்படும். இதே போன்று புதுச்சேரி- காக்கிநாடா துறைமுக விரைவு ரயில் பிப். 12-ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்குப் புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும்போது வழியில் தேவைப்படும் இடத்தில் 120 நிமிஷங்கள் நின்று செல்லும்.

புதுச்சேரி - காக்கிநாடா துறைமுக விரைவு ரயில் பிப். 14 பிற்பகல் 1.30 மணிக்குப் புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும். வழியில் தேவைப்படும் இடத்தில் 90 நிமிஷங்கள் நின்று செல்லும்.

புதுச்சேரி- திருப்பதி விரைவு ரயில் பிப். 12, 14 ஆகிய தேதிகளில் புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.40 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும். வழியில் தேவைப்படும் இடத்தில் 20 நிமிஷங்கள் நின்று செல்லும்.

இதே போன்று தாதா்- புதுச்சேரி விரைவு ரயில் பிப். 13-ஆம் தேதி தாதா் ரயில் நிலையத்தில் இரவு 9.30 மணிக்குப் புறப்பட்டு வரும்போது வழியில் தேவையான இடத்தில் 35 நிமிஷங்கள் நின்று செல்லும் என குறிப்பிடப் பட்டுள்ளது.