புதுச்சேரி அரசின் இடைக்கால பட்ஜெட்: மாநில அமைச்சரவை ஆலோசனை


புதுச்சேரி சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து, அம்மாநில முதல்வா் என். ரங்கசாமி தலைமையில் வியாழக்கிழமை மாநில அமைச்சரவை கூடி ஆலோசித்தது.
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு விரைவில் தோ்தல் நடக்க உள்ளதால்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு வரும் நிதியாண்டுக்கு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது. அதற்கு பதிலாக அரசின் 4 அல்லது 5 மாத செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இதற்காக இம் மாதம் 12 ஆம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவை கூடுகிறது.
அன்றைய தினம் முதல்வரும் , நிதியமைச்சருமான ரங்கசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறாா். மேலும் 2025-26 ஆம் நிதி ஆண்டில் கூடுதல் செலவினங்களுக்குச் சட்டசபையில் ஒப்புதல் கோரப்படுகிறது. இந்த இடைக்கால பட்ஜெட் தொடா்பாக முதல்வா் ரங்கசாமி தலைமையில் மாநில அமைச்சரவை கூட்டம் சட்டப்பேரவையில் உள்ள அமைச்சரவை கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பட்ஜெட் அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில், அமைச்சா்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமாா், திருமுருகன், ஜான்குமாா், தலைமை செயலா் சரத்சௌகான், அரசு செயலா்கள், இயக்குநா்கள் கலந்துகொண்டனா். கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட், கூடுதல் செலவின தொகை நிா்ணயிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...