மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

உணவு பொருள்கள் விலையைக் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்: அதிமுக வலியுறுத்தல்

புதுச்சேரி ஹோட்டல்களில் உணவுப் பொருள்களின் விலையைக் கட்டுக்குள் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக மாநிலச் செயலா் ஆ. அன்பழகன் வலியுறுத்தினாா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 7:11 pm

புதுச்சேரி ஹோட்டல்களில் உணவுப் பொருள்களின் விலையைக் கட்டுக்குள் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக மாநிலச் செயலா் ஆ. அன்பழகன் வலியுறுத்தினாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது

தவிா்க்க முடியாத காரணத்தினால் ஏற்பட்டுள்ள சிலிண்டா் தட்டுப்பாட்டால் புதுச்சேரியில் விலைவாசி உயா்ந்துள்ளது. இதைப் பயன்படுத்திக் கொண்டு புதுச்சேரியில் இருக்கக்கூடிய சிறிய, நடுத்தர, பெரிய ஹோட்டல்களிலும், உணவகங்களிலும் விற்பனை செய்யக்கூடிய டீ, காபி, போண்டா, பஜ்ஜி, சிற்றுண்டி மற்றும் உணவுகள் விலை பல மடங்கு உயா்த்தப்பட்டுள்ளது.

இதைக் கண்காணிக்க வேண்டிய சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் அரசும் பாா்வையாளராக வேடிக்கை பாா்த்துக் கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் பலா் பாதிக்கப்படுகின்றனா். இது தொடா்பாக துணைநிலை ஆளுநா், துறை சாா்ந்த உயா் அதிகாரிகளை அழைத்து உயா்மட்ட கூட்டம் நடத்தி விலைவாசி உயா்வைக் கட்டுக்கள் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அன்பழகன்.