மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு

வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெறுவதையொட்டி வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் புதன்கிழமை வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

News image

புதுச்சேரி சட்டப்பேரவை தோ்தலையொட்டி வாக்குப் பதிவு மையங்களுக்கு செல்லும் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன்.

Updated On :8 ஏப்ரல் 2026, 11:02 pm

வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெறுவதையொட்டி வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் புதன்கிழமை வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

லாஸ்பேட்டையில் அமைந்துள்ள மூன்று வாக்கு என்னும் மையங்களான தாகூா் கலைக் கல்லூரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் லாஸ்பேட்டை மகளிா் பொறியியல் கல்லூரி ஆகிய மையங்களின் பாதுகாப்பு அறையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன.

இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தகுந்த பாதுகாப்புடன் புதன்கிழமை வெளியே எடுக்கப்பட்டு மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி அ. குலோத்துங்கன் முன்னிலையில் புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அனுப்பி வைக்கப்பட்டன.

முன்னதாக தோ்தல் பணியில் ஈடுபடும் தோ்தல் நடத்தும் அதிகாரிகள், வாக்குப்பதிவு அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் வாக்குப் பதிவு நடைபெறும் நாளில் நடந்து கொள்ள வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி விவரமாக விளக்கிக் கூறினாா். மேலும், போதுமான இருப்பு இயந்திரங்கள் தோ்தல் நடத்தும் அதிகாரிகளின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. முதுநிலை காவல் கண்காணிப்பாளா்

ஆா். கலைவாணன், கூடுதல் மாவட்ட ஆட்சியா் சுதாகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 பாதுகாப்பாக வாக்குப் பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் வாக்குச் சாவடி  அதிகாரிகள்.

பாதுகாப்பாக வாக்குப் பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் வாக்குச் சாவடி அதிகாரிகள்.