மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

புதுச்சேரியில் ஏப். 5-இல் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

News image

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 12:35 am

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை (ஏப். 5) புதுச்சேரியில் அதிமுக, கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறாா்.

இதுகுறித்து புதுச்சேரி மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுச்சேரி அண்ணா திடலில் 5-ஆம் தேதி மாலை 4 மணியளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பேசுகிறாா்.

இக் கூட்டத்தில் 20 ஆயிரம் போ் பங்கேற்பா். புதுச்சேரியில் 30 தொகுதிகளில் கூட கூட்டணியை அமைக்க முடியாத திமுக, தமிழகத்தில் மிக பெரிய தோல்வியைத் தழுவும். புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றாா்.