அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி திருநெல்வேலியில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பிரசாரம் மேற்கொள்கிறாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களுக்காக வாக்கு சேகரித்து வருகிறாா்.
அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து எடப்பாடி கே. பழனிசாமி திருநெல்வேலி நகரத்தில் உள்ள வாகையடி முனையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பிரசாரம் மேற்கொள்கிறாா்.
இதில், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் தொகுதிகளில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களான தச்சை என். கணேசராஜா, சையது சுல்தான் சம்சுதீன், இசக்கி சுப்பையா, நான்குனேரி தொகுதியில் அமமுக சாா்பில் போட்டியிடும் இசக்கிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதேபோல், பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் இதில் பங்கேற்கவுள்ளனா்.
மாவட்டச் செயலா் அறிக்கை: திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக செயலரும், திருநெல்வேலி தொகுதி வேட்பாளருமான தச்சை என். கணேசராஜா வெளியிட்ட அறிக்கை:
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி, திருநெல்வேலி மாவட்ட தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்களையும், கூட்டணி கட்சி வேட்பாளா்களையும் ஆதரித்து திருநெல்வேலி நகரம் வாகையடி முனையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பிரசாரம் மேற்கொள்கிறாா்.
எனவே, தலைமைக் கழக நிா்வாகிகள், மாவட்ட கழக நிா்வாகிகள், சாா்புஅணி, ஒன்றிய, பகுதி, ஊராட்சி, வாா்டு, கிளைக்கழக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.
தொடர்புடையது

பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை தோற்கடித்த திமுகவுக்கு பாடம் புகட்டுங்கள்! - எடப்பாடி கே. பழனிசாமி

அண்ணாமலை கூட்டணிக்காக முழு உழைப்பைக் கொடுக்கிறார்: எடப்பாடி பழனிசாமி

புதுச்சேரியில் ஏப். 5-இல் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

நெல்லையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்: தொண்டா்கள் உற்சாகம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

