தெரு விளக்கு உண்டு ! ஆனால் எரியாது ! !
புதுச்சேரி, செப்.3: புதுச்சேரியில் பிரதான சாலைகள் தவிர மற்ற இடங்களில் வீட்டு விளக்குகளால் மட்டுமே தெருக்கள் வெளிச்சம் பெறும் நிலை கடந்த ஓராண்டாக இருந்து வருகிறது. ÷வரலாற்று பாரம்பரியம் மிக்க, பிரான்ஸ


புதுச்சேரி, செப்.3: புதுச்சேரியில் பிரதான சாலைகள் தவிர மற்ற இடங்களில் வீட்டு விளக்குகளால் மட்டுமே தெருக்கள் வெளிச்சம் பெறும் நிலை கடந்த ஓராண்டாக இருந்து வருகிறது.
÷வரலாற்று பாரம்பரியம் மிக்க, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நகரம் புதுச்சேரி. இங்கு பிரதான சாலைகள் 24 மணி நேரமும் தொழிலாளர்களால் தூய்மைப்படுத்தப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த புதுச்சேரியில் இரவு 9 மணிக்கு மேல் இருள் சூழ்ந்த தெருக்களும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
÷ஒவ்வொரு நாளும் மாலை 6 மணி முதல் வீடுகளில் எரியும் மின் விளக்கின் வெளிச்சத்தை பெற்று இத்தெருக்கள் பிரகாசம் அடைகிறது. இரவு 9 மணிக்கு பிறகு அனைவரும் உறங்க செல்லும்போது, வீட்டு விளக்கை அணைக்கும் நேரத்தில் தெருக்களில் இருள் சூழ்ந்து விடுகிறது.
÷அனைத்து தெருக்களிலும் மின் விளக்குகள் இருக்கிறது. ஆனால் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால் தெருவிளக்குகள் இருந்தும், வெளிச்சம் பெறாத தெருக்களாக புதுச்சேரி தெருக்கள் இருந்து வருகின்றன.
÷இது குறித்து அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் தான் மக்களின் பிரதிநிதியாக கேள்வி கேட்பார் என்பதால் அவரது வீட்டின் அருகில் மட்டும் மின் விளக்குகளை மின்துறையினர் சரி செய்து விடுகின்றனர். மக்களிடம் வரிப்பணம் வசூலிக்கும்போது சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம், வரிப்பணம் வாங்கும் நீங்கள், மின் விளக்கை சரி செய்யுங்கள் என்று மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
÷ஒவ்வொரு பகுதியிலும் வரி வசூலிப்பவர்கள், மக்கள் நம்பும்படியான காரணத்தை கூறி சமாளித்து, வரி வசூல் செய்து வருகின்றனர். தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட ஒரு பகுதியில் தெரு விளக்கு பல மாதங்களாக எரியாமல் இருக்கிறது. இது குறித்து அப்பகுதியில் வரி வசூலிப்பவரிடம் பொதுமக்கள் கேட்டால், இந்த தொகுதி முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் தொகுதி. இவரை முதல்வர் பதவியில் இருந்து இறக்கியதில் இருந்து, இப்பகுதியில் மின் விளக்குகள் உள்ளிட்ட பலவற்றை அரசு அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்றும் கூறுகின்றனர்.
÷இது குறித்து முன்னாள் முதல்வர் என்.ரங்கசாமியிடம் கேட்டபோது அவர் கூறியது: இரவு 7 மணிக்கு மேல் புதுச்சேரி நகர் முழுவதையும் சுற்றிப் பாருங்கள். தட்டாஞ்சாவடி தொகுதியில் மட்டும் தெருக்களில் மின் விளக்குகள் எரியவில்லையா அல்லது புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான தெருக்களில் எல்லாம் மின் விளக்குகள் எரியவில்லையா என்பது தெரிய வரும் என்றார்.
÷சில நகர்மன்ற உறுப்பினர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியது: மின் விளக்குகள் குறிப்பிட்ட மாதங்களுக்கு பிறகு பழுதடைகின்றன. தெரு மின் விளக்குகள் நகராட்சி கட்டுப்பாட்டில் இல்லை. மின்துறை கட்டுப்பாட்டில் தான் உள்ளது. மின் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இதை சரி செய்ய மின்துறையிடம் போதிய நிதியில்லை. அதனால் முறையாகப் பராமரிக்க முடியவில்லை என்று கூறுவதாக தெரிவித்தனர்.
÷புதுச்சேரியில் உள்ள பல தெருக்களில் தெரு விளக்குகள் எரியாதது குறித்து, மின்துறை செயற்பொறியாளர் மதிவாணனிடம் கேட்டபோது, உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...