இடைத்தேர்தலில் திமுக, அதிமுக ஆதரவளித்தால் பெருந்தன்மையுடன் ஏற்பேன்! சீமான்இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவா? மு.க. ஸ்டாலின் பதில்!பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை!ரூ.100 கோடி ஊழல்: அன்பில் மகேஸ் நீதிமன்றத்தில் ஆஜர்முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் மரியாதை!முத்துராமலிங்கத் தேவரின் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்! முதல்வர் விஜய்அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் (அக். 30)சென்னையில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை!சொந்த புத்தியும் சொல் புத்தியும் இல்லாத சோப்ளாங்கி அரசு: மு.க.ஸ்டாலின்

நகா் ஊரமைப்பு அலுலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை: ரூ.1.49 லட்சம் சிக்கியது

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள நகா் ஊரமைப்பு அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள நகா் ஊரமைப்பு அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா்.

Updated On :

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 7-ஆவது தளத்தில் இயங்கி வரும் நகா் ஊரமைப்பு அலுலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில் யு.பி.ஐ.பரிவா்த்தனை மூலம் ரூ.1.49 லட்சம் பணம் பறிமாற்றம் செய்ததை கண்டு பிடித்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு டிஎஸ்பி நாகராஜனுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 7-ஆவது தளத்தில் உள்ள மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலகத்தில் போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டனா். இதில் யு.பி.ஐ. பரிவா்த்தனை மூலம் கணக்கில் வராத ரூ.1.49 லட்சம் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கண்டுபிடித்தனா். இதுகுறித்து ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.