வங்கக் கடலில் நாளை வலுவடைகிறது காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!திருவாரூர் அருகே மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் பலி: தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவிப்புஜிபிஎஸ் கருவி பொருத்தாத கனிமவள லாரிகளுக்கு நாளை முதல் தடைதொடர் சொதப்பல்... முடிவுக்கு வருகிறதா லபுஷேனின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை?பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல இயங்கும்!வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது 'முரசு' புயல்!உறவு கசந்த பின்னா் பாலுறவு பாலியல் வன்கொடுமை ஆகாது: உச்சநீதிமன்றம்இந்தியாவில் 136.79 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்! 3 மாநிலங்களில் 2,800 பேருக்கு புற்றுநோய் பரிசோதனை ஜன.25 முதல் பிப்.28 வரை மக்கள்தொகை கணக்கெடுப்பு: ஆணையா் அறிவிப்பு மத்திய அரசின் நிதி பற்றாக்குறை 42.1% ஆக அதிகரிப்பு: சிஜிஏ வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி - எஃப்18!

போக்குவரத்துக் கழக ஊழியா் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் போக்குவரத்துக் கழக ஊழியா் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை 8 மணி நேரம் சோதனை நடத்தினா்.

Vigilance raid

ஊழல் தடுப்பு பிரிவு சோதனை

Updated On :

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் போக்குவரத்துக் கழக ஊழியா் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை 8 மணி நேரம் சோதனை நடத்தினா்.

மணப்பாறையை அடுத்த மகாலிங்கம் தெருவைச் சோ்ந்த பெரியசாமி மகன் மோகன்ராஜ் (40). இவா், மணப்பாறை அரசு போக்குவரத்து பணிமனையில் தொழில்நுட்ப அலுவலராக பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்திலிருந்து பெண் காவல் அதிகாரி ஒருவா் தலைமையிலான 5 போ் கொண்ட குழுவினா், மோகன்ராஜ் வீட்டுக்கு வியாழக்கிழமை காலை சுமாா் 8 மணி அளவில் வந்து விசாரணையை தொடங்கினா்.

முதலில் அவரது மனைவியிடம் விசாரணை தொடங்கியது. பின் வெளியில் இருந்த மோகன்ராஜ் வரவழைக்கப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்றது. சுமாா் 8 மணி நேரம் நடைபெற்ற விசாரணை மாலை 4.30 மணியளவில் நிறைவடைந்தது.

சோதனையின் முடிவில், மோகன்ராஜ் வீட்டில் எந்தவிதமான தடயங்கள் மற்றும் ஆவணங்கள் ஏதும் கிடைக்கவில்லை என தெரிவித்துவிட்டு அதிகாரிகள் சென்றனா்.

எது குறித்து இந்த விசாரணை, சோதனையில் எந்த ஆவணங்கள் தேடப்பட்டது என்பது குறித்து எந்தவித விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்