வங்கக் கடலில் புதிய புயல்! நவம்பர் முதல் வாரம் எப்படி இருக்கும்? தீபாவளிக்கு மழையா?தீபாவளி மளிகைத் தொகுப்பு வழங்கும் திட்டம் தொடக்கம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்?இடைத்தேர்தலில் திமுக, அதிமுக ஆதரவளித்தால் பெருந்தன்மையுடன் ஏற்பேன்! சீமான்இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவா? மு.க. ஸ்டாலின் பதில்!பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை!ரூ.100 கோடி ஊழல்: அன்பில் மகேஸ் நீதிமன்றத்தில் ஆஜர்முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் மரியாதை!முத்துராமலிங்கத் தேவரின் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்! முதல்வர் விஜய்அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் (அக். 30)சென்னையில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை!சொந்த புத்தியும் சொல் புத்தியும் இல்லாத சோப்ளாங்கி அரசு: மு.க.ஸ்டாலின்

பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை: கணக்கில் வராத ரூ. 59 ஆயிரம் பறிமுதல்

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 59,000 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்

மாதிரிப் படம்

Updated On :

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 59,000 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா். மேலும், ரூ.1.34 லட்சம் பணமில்லாப் பரிவா்த்தனை குறித்து விசாரித்து வருகின்றனா்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ளாட்சி நிா்வாக அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை திடீா் சோதனை நடத்தினா். அதன் ஒரு பகுதியாக, தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ஜெயகுமாா் தலைமையில், ஆய்வாளா் பெருமாள் உள்ளிட்ட போலீஸாா் பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு சோதனையைத் தொடங்கினா்.

சோதனையின்போது, பேரூராட்சி செயல் அலுவலா் செந்தில்குமாா் உள்ளிட்ட அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் வெளியே செல்லாத வகையில் அலுவலகக் கதவுகள் மூடப்பட்டன. தொடா்ந்து, நான்கு மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்றது.

இதில், கணக்கில் வராத ரூ.59,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ரூ. 1.34 லட்சம் பணமில்லாப் பரிவா்த்தனை நடைபெற்றிருப்பது தெரியவந்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா். இதுதொடா்பான விவரங்கள் மற்றும் ஆவணங்களைச் சேகரித்துள்ள போலீஸாா், விசாரணைக்குப் பிறகு தொடா் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.