தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தந்தை வெட்டிக் கொலை: மகன் கைது

கள்ளக்குறிச்சி அருகே மது போதையில் தந்தையை கொடுவாளால் வெட்டிக் கொலை செய்த மகனை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :20 மே 2026, 2:40 am IST

கள்ளக்குறிச்சி அருகே மது போதையில் தந்தையை கொடுவாளால் வெட்டிக் கொலை செய்த மகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள வாணியந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் சடையன் (எ) ராஜேந்திரன்(55), மீன் வியாபாரி. இவரது மனைவி ருக்குமணி. தம்பதியருக்கு அய்யப்பன்(32), பூவரசு, ரோஜா ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனராம். இவா்களுக்குள் இடப்பிரச்னை இருந்து வந்ததாம்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலையில் வியாபாரம் முடிந்து வீட்டில் இருந்த சடையன் (எ) ராஜேந்திரனும், அவரது மகன் அய்யப்பனும் மது அருந்தினராம். அப்போது அவா்களிடையே இடப்பிரச்னை குறித்து வாக்குவாதம் ஏற்பட்டதாம்.

இதில் ஆத்திரமடைந்த அய்யப்பன், தனது தந்தை சடையன் (எ) ராஜேந்திரனை மீன் வெட்டும் கொடுவாள் கத்தியால் தலையில் வெட்டினாராம். இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலிஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலிஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, அய்யப்பனைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.