ஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு! முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

அரசுப் பேருந்து ஓட்டுநா் வீட்டில் எட்டேகால் பவுன் தங்க நகைகள் திருட்டு

News image

தேவியகரம் கிராமத்தில் திருட்டு நடைபெற்ற ஓட்டுநா் வீட்டில் பொருள்கள் சிதறிய நிலையில் திறந்து கிடக்கும் பீரோ.

Updated On :11 மே 2026, 2:34 am IST

கள்ளக்குறிச்சி, மே 10: திருக்கோவிலூா் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநா் வீட்டின் பூட்டை உடைத்து எட்டேகால் பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் , ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட தேவியகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திர பிரசாத். இவா் திருக்கோவிலூரை அடுத்த மனம்பூண்டி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா். இவா் சனிக்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு, வீட்டின் முன் தனது குடும்பத்தினருடன் தூங்கியுள்ளாா்.

ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்து பாா்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். பின்னா் உள்ளே சென்று பாா்த்த போது இரு பீரோக்களில் இருந்த துணிகள், பொருள்கள் சிதறிக் கிடந்ததோடு, அதிலிருந்த எட்டேகால் பவுன் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.