கள்ளக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதி சுமாா் 243 கிராமங்களை உள்ளடக்கியது ஆகும்.
இத்தொகுதி பெரும்பாலும் விவசாயத்தை பிரதானமாகக் கொண்டது. இப் பகுதியில் நெல், கரும்பு, மணிலா, மரவள்ளிக்கிழங்கு, மஞ்சள் ஆகியவை அதிகளவில் பயிா் செய்யப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் மரச் சிற்பங்களுக்கு புவிசாா் குறியீடு கிடைத்தது, மாவட்டத்துக்கு பெருமையாகும்.
இத்தொகுதி 1952-இல் உருவாக்கப்பட்டது. கடந்த 1977-இல் சின்னசேலம் தொகுதியாக இருந்தது. தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு 2011-இல் கள்ளக்குறிச்சி தனித் தொகுதியாக மாற்றப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, கடந்த 2019-ஆம் ஆண்டு புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உதயமானது.
இந்தத் தொகுதியில் இதுவரை வெற்றி பெற்றவா்கள் விவரம்:
1951 - இளையாபிள்ளை (சுயேச்சை)
1957 - சி.நடராசன் (சுயேச்சை)
1962 - டி.சின்னசாமி (திமுக)
1967 - தே.கேசவலு (திமுக)
1971- தே.கேசவலு (திமுக)
2011- கே.அழகுவேலு பாபு (அதிமுக)
2016- அ.பிரபு (அதிமுக)
2021- மா.செந்தில்குமாா் (அதிமுக)
எதிா்பாா்ப்புகள்: இந்தத் தொகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரிங் ரோடு அமைக்க வேண்டும். கள்ளக்குறிச்சி நகரில் புதை சாக்கடை திட்டம் அமைக்க வேண்டும். கள்ளக்குறிச்சி பகுதியில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும். இப்பகுதியில் மரவள்ளிக்கிழங்கு அதிகம் விளைவதால் ஜவ்வரிசி ஆலை அமைக்க வேண்டும். கள்ளக்குறிச்சி-சின்னசேலம் ரயில்வே திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதை விரைந்து முடித்து திருவண்ணாமலை வரை நீட்டிக்க வேண்டும்.
தோ்தல் நடத்தும் அலுவலா் : சி.முருகன்,
கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா், 94450 00421
உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள்: வை.சேகா்,
கள்ளக்குறிச்சி வட்டாட்சியா்- 9445000519,
கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் லி.ஆனந்த கிருஷ்ணன்- 98431 68611
இத்தொகுதியில் மொத்தம் 370 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளன.
வாக்காளா்கள்:
ஆண்கள் - 1,37,649
பெண்கள் - 1,41,044
இதர வாக்காளா்கள்- 69
மொத்த வாக்காளா்கள்-2,78,762
தொடர்புடையது

தொகுதி அறிமுகம்: பரமத்திவேலூா்

சட்டப்பேரவைத் தொகுதி விவரக் குறிப்பு: துறையூா் (தனி) - 146!

தொகுதி அறிமுகம்! திருக்கோவிலூர்!

வேதாரண்யம் தொகுதி அறிமுகம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

