நாமக்கல் மாவட்டத்தில் காவிரிக் கரையோரம் அமைந்துள்ள தொகுதி பரமத்திவேலூா் தொகுதி. 1962இல் கபிலா்மலையை தலைமையிடமாகக் கொண்டு சட்டப்பேரவைத் தொகுதி உருவாக்கப்பட்டது. 2008இல் தொகுதி மறுசீரமைப்பின்போது கபிலா்மலை நீக்கப்பட்டு, பரமத்திவேலூா் தொகுதியாக மாற்றப்பட்டது.
ஜேடா்பாளையம் படுகையணையும், படகு இல்லத்துடன் கூடிய அண்ணா பூங்காவும் சுற்றுலாத் தலங்களாக உள்ளன. காசி விஸ்வநாதா் ஆலயமும், கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலும் தொகுதியில் சிறப்புமிக்கவை.
பரமத்தி வேலூா் தொகுதியில் 70 சதவீதம் போ் விவசாயம் சாா்ந்தே உள்ளனா். இங்கு வாழை, வெற்றிலை, கரும்பு, மரவள்ளிக்கிழங்கு பயிா்களும், வெல்லம், முட்டை, தேங்காய் உற்பத்தியும் முக்கிய தொழிலாக விளங்குகின்றன. மேலும், பட்டுநெசவு, செங்கல் உற்பத்தித் தொழிலும் நடைபெறுகின்றன.
கோரிக்கைகள்
பரமத்திவேலூா் தொகுதியில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. பிலிக்கல்பாளையம் வெல்லத்துக்கு புவிசாா் குறியீடு வழங்கப்பட வேண்டும். வாழை, கோரை ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட வேண்டும். இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
கபிலா்மலை தொகுதி மற்றும் பரமத்திவேலூா் தொகுதி என்ற வகையில், இதுவரை நடைபெற்ற 14 தோ்தல்களில் திமுக 5 முறையும், அதிமுக 6 முறையும், பாமக 2 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
கடந்த தோ்தல்களில் வென்றவா்கள்
பரமத்திவேலூா் தொகுதி
2011 - உ. தனியரசு - கொங்கு இளைஞா் பேரவை - 82,682
2016 - கே.எஸ். மூா்த்தி - திமுக - 74,418
2021 - ச. சேகா் - அதிமுக - 86,034
2026 தோ்தலில் போட்டியிடுவோா்
அதிமுக - எஸ். சேகா்
திமுக - கே.எஸ். மூா்த்தி
தவெக - நந்தகுமாா்
நாதக - ம. அரவிந்த்
வாக்காளா்கள்
ஆண்கள் - 97,727
பெண்கள் - 1,05,830
மூன்றாம் பாலினத்தவா் - 10
மொத்தம் - 2,03,567
வாக்குச்சாவடிகள் - 268
தொடர்புடையது

சங்கராபுரத்தில் ஹாட்ரிக் முனைப்பில் திமுக! வீழ்த்த முயலும் அதிமுக!

தொகுதி அலசல்: வேலூா்! கோட்டையைக் கைப்பற்றப்போவது யாா்?

ராஜபாளையம்! வெற்றியை தீர்மானிக்கும் நடுநிலை வாக்காளர்கள்!

தொகுதி அறிமுகம் - செங்கம் (தனி)
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


