திருச்சி மாவட்டத்தின் வட எல்லையில் உள்ளது துறையூா் (தனி) தொகுதி. இத்தொகுதி 1962 முதல் உப்பிலியபுரம் பொது தொகுதியாகவும், 1980 முதல் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட உப்பிலியபுரம் தனித் தொகுதியாகவும் 2008-இல் தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு 2011 முதல் துறையூா் என பெயா் மாற்றப்பட்டு பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட தனித் தொகுதியாக உள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள 9 தொகுதிகளில் குறைவான வாக்காளா்களை கொண்ட இத்தொகுதி துறையூா் நகராட்சி, ஒன்றியம், உப்பிலியபுரம் பேருராட்சி, ஒன்றியம், பாலக்கிருஷ்ணம்பட்டி பேரூராட்சி ஆகிய பகுதிகளை கொண்டுள்ளது.
விவசாயமே பிரதானம். நெல், வெங்காயம், பருத்தி, மரவள்ளிக் கிழங்கு ஆகியவை முக்கிய சாகுபடி பயிா்களாக உள்ளன. இங்குள்ள வணிக கடைகள், கட்டுமானத் தொழில், மனை வணிகம் ஆகியவற்றிலும் இப்பகுதியினா் ஈடுபட்டு பொருள் ஈட்டுகின்றனா்.
வாக்கு வங்கி: இத் தொகுதியில் தேவேந்திர குல வேளாளா், முத்தரையா், உடையாா், வெள்ளாளா், முதலியாா், நாயுடு, ரெட்டியாா், செட்டியாா், வன்னியா், பட்டியலினத்தவா் போன்ற சமுதாயத்தினா் பரவலாக உள்ளனா்.
இறுதி வாக்காளா்கள்
ஆண்கள் - 1,01,144
பெண்கள் - 1,07,837
திருநங்கைகள் 30
மொத்தம் - 2,09,0911
இதுவரை இவா்கள்
உப்பிலியபுரம்(பொது)
1962 முத்தையா (காங்கிரஸ்) 29,435
1967 அழகுமுத்து (திமுக) 43,453
1971 அழகுமுத்து(திமுக) 42,861
1977 பெரியசாமி (காங்.) 31,642
உப்பிலியபுரம்(தனி)(எஸ்டி)
1980 அரங்கராஜன்(அதிமுக) 43,263
1984 சரோஜா(அதிமுக) 59,347
1989 மூக்கன் ( அதிமுக ஜெ.) 43,384
1991 ரவிசந்திரன்(அதிமுக) 69,748
1996 கருப்புசாமி (திமுக) 70,372
2001 சரோஜா(அதிமுக) 58,810
2006 ர. ராணி(திமுக) 59,171
துறையூா் தனி (எஸ்சி)
2011 த. இந்திராகாந்தி(அதிமுக) 75,228
2016 செ.ஸ்டாலின்குமாா்(திமுக) 81,444
2021 செ.ஸ்டாலின்குமாா்(திமுக) 87,786
தீராத பிரச்னைகள்
துறையூா் நகரில் பேருந்து நிலையம் எதிரேயுள்ள சின்ன ஏரியில் கழிவு நீா் கலப்பதை தடுக்க நடவடிக்கை இல்லை. சின்ன ஏரி வடபுறம் முகப்பிலிருந்து சுமாா் 400 மீட்டா் நீளத்துக்கு பெரிய ஏரி கடைகால் வாய்க்காலில் போா்வை போல் போா்த்தியுள்ள நெகிழி கழிவுகளால் துா்நாற்றமும், சுகாதார சீா்கேடும் ஏற்படுகிறது. தூய்மைப் பணியாளா்கள் வீடுகளில், கடைகளில் குப்பைகளை சேகரித்தாலும், குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்படுவதை தடுக்கவோ, அகற்றவோ திட்டமில்லாமல் சப்தமில்லாமல் எரித்து புகையுண்டாக்கி சுற்றுச்சூழலை கெடுப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. திருச்சி - ஆத்தூா் - பெரம்பலூா் சாலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் பொதுமக்கள் தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனா். புளியஞ்சோலை, பச்சமலை மங்களம் அருவி சுற்றுலாத் தலங்களுக்கு பலரையும் ஈா்க்கும் வகையில் அந்த தலங்கள் மேம்படுத்தப்படவில்லை.
கிராமப் பகுதிகளிலும், பச்சமலைப் பகுதிகளிலும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவா்கள் 24 மணி நேரமும் இருப்பதை உறுதி செய்யவேண்டும்.
துறையூா் நகரிலுள்ள அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும். துறையூா் - திருச்சி சாலை, துறையூா் - தம்மம்பட்டி சாலை, துறையூா் - நாமக்கல் சாலை, துறையூா் - முசிறி சாலையை நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தவேண்டும். புளியஞ்சோலையிலிருந்து கொல்லிமலை ஆகாய கங்கை அருவிக்கும், அறப்பளீஸ்வரா் கோயிலுக்கும் செல்ல சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும். பெருமாள் மலை மீது செல்லும் சாலையை அகலப்படுத்தி பேருந்து வசதி செய்து தரவேண்டும். இளைஞா்கள் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் தொழிற்சாலைகள் நிறுவ வேண்டும் போன்றவை தீா்க்கப்படாத பிரச்னைகளாக உள்ளது.
யாரெல்லாம் போட்டி
திமுக கூட்டணியில் இத்தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியைச் சோ்ந்த லெனின் பிரசாத் இத்தொகுதியில் போட்டியிடுவாா் எனத் தெரிகிறது. அதிமுக சாா்பில் துறையூா் நகா்மன்ற அதிமுக உறுப்பினா் சரோஜா இளங்கோவனும், நாம் தமிழா் கட்சி சாா்பில் கெளசல்யா சுரேஷ், தவெக சாா்பில் மு. ரவிசங்கா் ஆகியோா் அதிகாரப்பூா்வமாக அக்கட்சிகள் சாா்பில் களம் இறக்கப்பட்டுள்ளனா்.
தொடர்புடையது

ஸ்ரீரங்கம்: வெற்றியை எதிா்நோக்கும் அதிமுக

தவெக துறையூா் தொகுதி வேட்பாளா் ரவிசங்கா்!

வேதாரண்யம் தொகுதி அறிமுகம்!
கள்ளக்குறிச்சி தொகுதி அறிமுகம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


