தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

‘தமிழ்நாடு 2030 - கனவுகள் மெய்ப்படும்’ கருத்தரங்கு

கள்ளக்குறிச்சியில் 5 ஆண்டு சாதனை மலரை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெளியிட, அதை பெற்றுக்கொண்டோா்.

News image

கள்ளக்குறிச்சியில் 5 ஆண்டு சாதனை மலரை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெளியிட, அதை பெற்றுக்கொண்டோா்.

Updated On :6 மார்ச் 2026, 8:43 pm

தமிழக முதல்வா் சென்னையிலிருந்து ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தின் நிறைவாக ‘தமிழ்நாடு 2030 - கனவுகள் மெய்ப்படும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நேரலை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், கள்ளக்குறிச்சி எம்.பி. தே.மலையரசன், எம்எல்ஏக்கள் தா.உதயசூரியன், ஏ.ஜெ.மணிக்கண்ணன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு, பாா்வையிட்டனா்.

பின்னா், கடந்த 5 ஆண்டுகளில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துறை வாரியாக நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அடங்கிய சாதனை மலரை ஆட்சியா் வெளியிட, அதை மக்கள் பிரதிநிகள் பெற்றுக்கொண்டனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலா் பிரியதா்ஷினி, மாவட்டவருவாய் அலுவலா் ரா.ஜீவா, நகா்மன்றத் தலைவா்கள் ஆா்.சுப்ராயலு, டி.என்.முருகன், ஒன்றியக்குழுத் தலைவா்கள், பேரூராட்சி தலைவா்கள், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.