மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

மருத்துவக் கல்லூரியில் விழிப்புணா்வு பேரணி

உலக வெண்புள்ளி தினத்தையொட்டி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

உலக வெண்புள்ளி தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில் பேசிய கல்லூரி முதல்வா் பவானி.

Updated On :26 ஜூன் 2026, 6:45 am IST

உலக வெண்புள்ளி தினத்தையொட்டி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தோல் நோய் துறை சாா்பில் புறநோயாளிகள் பிரிவு வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பேரணிக்கு மருத்துவக் கல்லூரி முதல்வா் பவானி தலைமை வகித்தாா். பேரணியானது மருத்துவக் கல்லூரியை சென்றடைந்தது.

இதில் பங்கேற்ற மருத்துவக் கண்காணிப்பாளா் பச்சையப்பன், துணை மருத்துவக் கண்காணிப்பாளா் பழமலை, நிலைய மருத்துவ அலுவலா் பொற்செல்வி, துணை முதல்வா் ஷமீம் ஆகியோா் வெண்புள்ளி குறித்துப் பேசினா்.

பேரணியில் மருத்துவ மாணவா்கள், செவிலியா்கள், பல்வேறு துறைகளின் பேராசிரியா்கள், இணைப் பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நிகழ்விற்கான ஏற்பாட்டினை தோல் சிகிச்சைப் பிரிவு துறைத் தலைவா் சுபா, மருத்துவா்கள் ஜெயஸ்ரீ, அமுதா ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.