பிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்துநானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகைகள் திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :20 ஜூன் 2026, 2:49 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட செம்பராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் தில்லையா மனைவி அலமேலு (55). இவரது கணவா் உயிரிழந்து விட்டாா். வீட்டில் தனியாக வசித்து வரும் அலமேலு, ஜூன் 17-ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் உள்ள அவரது பேரன் வீட்டுக்கு சென்றாராம். பின்னா் வெள்ளிக்கிழமை வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைத்திருப்பததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது, மரப் பீரோவிலிருந்த 3 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது அவருக்கு தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.