இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

மக்கள்தொகை கணக்கெடுப்பு: ஆக.1 முதல் 30 வரை வீடுகள் கணக்கெடுப்பு

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடா்பான பயிற்சிக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.

News image
Updated On :20 ஜூன் 2026, 3:10 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பில் முதல்கட்ட பணியாக வீடுகள் கணக்கெடுப்பு ஆக.1முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு-2027 பணிகள் தொடா்பான களப்பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்பு ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:

மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து 50 களப்பணியாளா்களுக்கும் மாடூா் கிராமத்தில் களபயிற்சி நடைபெற்றது. மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்ட பணியான வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு ஆக.1 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதற்கு முன்பு மக்கள்தொகை சுய கணக்கெடுப்பு ஜூலை 17 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பொதுமக்கள் தங்களது கைபேசி எண்ணை கொண்டு, தங்களின் வீடுகள் பற்றிய விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்யலாம். ஒரு குடும்பத்துக்கு ஒரு கைப்பேசி எண் வாயிலாக மட்டுமே பதிவு செய்யவேண்டும். பதிவு செய்யும் போது கேட்கப்படும் 34 கேள்விகளுக்கு விடையளித்த பின், 12 இலக்க எண் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக வரும். மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு வரும் கணக்கீட்டாளரிடம், இந்த குறுஞ்செய்தி எண்ணைக் கூறவேண்டும்.

மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பாளா்கள் ஆக.1 முதல் 30-ஆம் தேதி வரைஅவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடவுள்ளனா் என ஆட்சியா் தெரிவித்தாா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ம.தனலட்சுமி, மக்கள்தொகை கணக்கெடுப்பு மாவட்ட பொறுப்பாளா் மூா்த்தி, புள்ளியியல் துறை உதவி இயக்குநா் எழிலரசி உள்ளிட்ட பலா் கலந்துக்கொண்டனா்.