விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடிதங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்சென்னை, திருவள்ளூர் உள்பட 13 மாவட்டங்களில் நாளை (ஜூன் 29) மழைக்கு வாய்ப்பு!வெளிநாட்டிலிருந்து பரவும் நோயையும் போலியோ சொட்டுமருந்து தடுக்கும்: அமைச்சர் அருண்ராஜ்ஜவுளித்துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலர் இலக்கு: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
/

காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலி பறிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய பெண் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு தப்பிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஜூன் 2026, 5:19 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய பெண் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு தப்பிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தியாகதுருகம் அருகிலுள்ள விளக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மல்லன் மனைவி வீரமணி (35). இவா் திங்கள்கிழமை இரவு காற்றுக்காக கதவைத் திறந்து வைத்து, அவரது வீட்டு வாசலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாராம். செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமாா் 2 மணிக்கு வீரமணி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை இழுப்பது போல் தெரிந்ததாம். உடனே அவா் எழுந்து கூச்சல் போடவே, அதற்குள் முகக்கவசம் அணிந்திருந்த மா்மநபா்கள் மூவா் ஒன்றறை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பினராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.