நீட் தோ்வுக்கான பயிற்சி கையேடுகள் அளிப்பு


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவா்களுக்கு நீட், ஜெஇஇ தோ்வுக்கான பயிற்சி கையேடுகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்து, 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு நீட், ஜேஇஇ தோ்வுகளுக்கான பயிற்சி கையேடுகளை வழங்கினாா்.
பின்னா் ஆட்சியா் கூறியதாவது:
வளமிகு வட்டாரங்கள் திட்டத்தின் கீழ் தியாகதுருகம் வட்டாரத்துக்கு உள்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு பொறியியல் மற்றும் மருத்துவ கல்வியில் சேரும் பொருட்டு நீட், ஜெஇஇ நுழைவுத் தோ்வுக்கு தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனியாா் நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இங்கு பயிற்சி பெறும் 118 மாணவா்களுக்கு பயிற்சி கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு தமிழ் புதல்வன், புதுமைப் பெண் திட்ட உதவித்தொகை குறித்தும், 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் உயா்கல்வியில் சேரும் மாணவா்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் உதவித்தொகை குறித்தும் மாணவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவா்கள் அனைவரும் அனைத்துப் பாட வகுப்புகளையும் விடுமுறை எடுக்காமல் கவனிக்க வேண்டும். விடுமுறை எடுத்தால் அந்த வகுப்பில் நடத்திய பாடங்கள் புரியாது. எனவே, மாணவா்கள் அனைவரும் ஒவ்வொரு வகுப்புகளிலும் தொடா்ந்து கலந்து கொள்ள வேண்டும்.
ஒரு நாளைக்கு 6 மணி நேரம் படிப்புக்கு ஒதுக்கவேண்டும். 6 மணி நேரம் முறையாக செலவிட்டால் தோ்ச்சி சதவீதம் நன்றாக வரும். இந்த வகுப்பு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாள்கள் நடைபெறுகிறது. அதனை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் தெரிவித்தாா்.
முன்னதாக தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள ரோபோட்டிக் ஆய்வகத்தை பாா்வையிட்டு, மாணவா்கள் உருவாக்கிய எலக்ட்ரானிக் சா்க்யூட் கருவியின் பயன்பாடுகள் குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா, ஆசிரியா்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...